Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியா மிர்சா உடன் திருமணமா? முதல் முறையாக மவுனத்தை கலைத்த முகமது ஷமி.. என்ன சொல்லி இருக்காரு?

மும்பை : பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை முஹம்மது ஷமி திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. இது குறித்து ஷமியோ இல்லை சானியா மிர்சாவோ இதுவரை வாய் திறக்கவில்லை.

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் விவகாரத்து செய்த நிலையில் தற்போது சானியா மிர்சா தனது குழந்தை பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். இதேபோன்று ஷமிக்கும் அவருடைய மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டு அவர் தனியே தான் வாழ்ந்து வருகிறார்.

Mohammed shami sania mirza marriage divorce


இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் என்று செய்திகள் பரவியதால் ரசிகர்கள் அதனை நம்பி விட்டனர். தற்போது முகமது ஷமியிடம் தாங்கள் சானியா மிர்சாவை திருமணம் செய்ய போகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்ட உடனே ஷமி டென்ஷன் ஆகிவிட்டார். இது குறித்து பேசிய அவர், சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற விஷயங்களை பரப்ப கூடாது. இந்த செய்தி மிகவும் விஷமத்தனமானது. யாரோ வேண்டுமென்றே விளையாட்டுக்காக பரப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பினால் நான் என்ன செய்வது? என்னுடைய மொபைல் போனை ஓபன் செய்தாலே சானியா மிர்சாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
Mohammed shami sania mirza marriage divorce


மீம்ஸ் என்பது அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே ஒருவர் வாழ்க்கையை கெடுக்கும் என்றால் நிச்சயம் அதைப்பற்றி யோசியுங்கள். கண்ட விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பாதீர்கள். மேலும் அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் தான் இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டது.

இது போன்ற நபர்கள்தான் இந்த செய்தியை வேண்டுமானாலும் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து செய்தியை போடுங்கள். அப்படி செய்தால் நிச்சயம் அதற்கு நான் பதில் அளிப்பேன். வெற்றிக்காக உழையுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களை நீங்களே முன்னேற்றம் செய்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு இந்த விஷயம் எல்லாம் செய்யாதீர்கள் என்று ஷமி கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 20, 2024, 12:40 [IST]
Other articles published on Jul 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+