மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்.. போட்டு கும்மிய பாதுகாவலர்.. இதயத்தை வென்ற ஷமி.. வீடியோ
டெல்லி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி தற்போது சரியான பதிலடியை தந்துள்ளது. இந்தியாவின் ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கே ஆஸ்திரேலியா அதிர்ச்சி அளித்துள்ளது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்து வருகிறது.

இந்தியா சரிவு
குறிப்பாக ரோகித் சர்மா 32 ரன்களும், கேஎல் ராகுல் 17 ரன்களும், புஜாரா டக் அவுட்டாகியும் வெளியேறினர். காயத்திலிருந்து திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து விராட் கோலி மற்றும் ஜடேஜா சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சொதப்பல்
விராட் கோலி 44 ரன்களுக்கு நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். இதே போன்று ஜடேஜா 26 ரன்களில் வெளியறினார். ரிஷப் பண்ட்க்கு மாற்றாக அறியப்பட்ட கேஎல் பரத்தும் 2வது முறையாக பேட்டிங்கில் சொதப்பினார். அவர் அதிரடியாக விளையாட முற்பட்டு 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தப்பிக்குமா இந்தியா
இதனையடுத்து, அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் இணைந்து இந்திய அணியை காப்பாறற போராடி வருகின்றனர். ஆஸ்திரலிய அணியின் ஸ்கோர் அருகே வந்தால் மட்டுமே ஒரு அளவுக்கு இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெற முடியும். இல்லையேனில் ஆஸ்திரேலியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.
காப்பாற்றிய முகமது ஷமி
இதனிடையே, டெல்லி மைதானத்தில் நேற்று ஆஸ்திரலியா விளையாடி கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் ஓடி வந்தார். அப்போது அந்த ரசிகரை பிடித்த பாதுகாவலர் அவரை சராமாரியாக போட்டு தாக்கினார். இதனை பார்த்த முகமது ஷமி, பாதுகாவலரிடம் ஓடி வந்து அடிக்க வேண்டாம் என்று கூறி, அவரை அனுப்பி வைத்தார். இதனை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications