கூடவே இருந்ததால்.. கோலியை எப்படி அவுட் ஆக்குவது என தெரியும்.. அதிர வைத்த இந்திய பவுலர்!
டெல்லி : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, தனக்கு எப்படி விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவது என தெரியும் எனக் கூறினார்.
Recommended Video
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக வலம் வருகிறார் விராட் கோலி. அவரது விக்கெட்டை வீழ்த்துவதை பல பந்துவீச்சாளர்கள் பெருமையாக கருதி வருகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலியின் பலவீனம் தனக்கு தெரியும் என்றும், அவரை எப்படி வீழ்த்துவது என தனக்கு தெரியும் எனவும் ஷமி கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அச்சுறுத்தும் ஷமி
இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லை என்ற குறையை போக்கியவர்களில் முகமது ஷமியும் ஒருவர். புவனேஸ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோருடன் சேர்ந்து டெஸ்ட் அரங்கில் மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார் ஷமி.

பலவீனம் தெரியும்
இந்த நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலியுடன் தான் அதிகம் பழகி இருப்பதால் அவரின் பலவீனம் தனக்கு தெரியும் என்றும், அவரை எப்படி வீழ்த்துவது எப்படி என தெரியும் என்றும் கூறி இருக்கிறார்.

பலவீனத்தை வைத்து..
"மற்றொரு வீரருடன் விளையாடும் போதும், நேரம் செலவிடும் போதும், பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அவரின் பலம் மட்டுமல்ல, அவரின் பலவீனமும் நமக்கு தெரிய வரும். ஒரு பந்துவீச்சாளராக நாம் பலவீனத்தை வைத்து வேலை செய்ய வேண்டும்" என்றார் ஷமி.

சிறிய குறைபாடுகள்
"விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், சிறந்த வீரருக்கு கூட சிறிய குறைபாடுகள் இருக்கும். அதை வைத்து நாம் வேலை செய்யலாம். ஒரே ஒரு பலவீனத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்தலாம்" என்றார் ஷமி.

உதாரணம்
"ஒரு உதாரணத்திற்கு, சமீபத்தில் ஒரு பேட்ஸ்மேன் ஏதேனும் ஒரு விஷயத்தில் தடுமாறி இருக்கிறாரா? என பார்க்க வேண்டும். அதன் பின் அதில் நாம் வேலை செய்ய வேண்டும்." என எப்படி தான் விராட் கோலியை வீழ்த்தினேன் என்பது பற்றி கூறினார் ஷமி.

கோலியை வீழ்த்தி உள்ளேன்
"நான் சில முறை (ஐபிஎல் தொடரில்) கோலியை வீழ்த்தி உள்ளேன். அது குறித்த விவரங்களை குறிப்பிடாமல் என்னால் இதை மட்டும் சொல்ல முடியும். பலவீனமான விஷயத்தில் தொடர்ந்து வேலை செய்யுங்கள்" என கூறினார் முகமது ஷமி.

ஆதரவும் உண்டு
கோலியை வீழ்த்துவதை பற்றி பேசிய ஷமி, கேப்டனாக கோலி எப்படி தன் பந்துவீச்சாளர்களை ஆதரிக்கிறார் என்பது பற்றியும் கூறினார். அவர் தன் பந்துவீச்சாளர்களை முழுமையாக நம்புவதால் அது அவர்கள் ஆட்டத்தை உயர்த்துவதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications