Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமது ஷமி, அகார்கர் இடையே எங்கு தவறு நடந்தது? உண்மையை சொன்ன அஸ்வின்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான முகமது சமி தனது உடல் தகுதியை நிரூபித்த பிறகும் ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது சமி அணியில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தமது உடல் தகுதி குறித்து நிரூபித்த முகமது சமி செய்தியாளர் சந்திப்பில் அஜித் அகார்கரை கடுமையாக சாடியிருந்தார். தம் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன் என்றும் ரஞ்சி கோப்பையில் விளையாடி அதை நிரூபித்து விட்டேன்.

Mohammed shami

இன்னும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சமி கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், நான் இந்த ஒரு விஷயத்தை மட்டும் வெளிப்படையாக சொல்ல விரும்புகின்றேன். இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு விஷயம் யாருக்கும் நேரடியாக சொல்லக்கூடாது.

இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன். இரு வீரர்கள் பக்கத்திலும் இருந்தும் தேர்வு குழுவினர் பக்கத்திலும் இருந்தும் நடக்க வேண்டும் நான் கவனித்தவரை யாராவது ஒரு விஷயத்தை மறைமுகமாக சொன்னால் அது உடனடியாக செய்தியில் வெளிவந்து விடுகிறது.

அது பிரச்சனைகளையே ஏற்படுத்தும் பாருங்கள். சமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்த பிறகு தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். இதனால் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஏன் இதை இவர் பேசினார் என்று யோசித்தால் சமி இடம் எந்த ஒரு விஷயத்தையும் யாரும் தெளிவுபடுத்தவில்லை.

நீங்கள் ஏன் அணியின் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அதேசமயம் இந்த விவகாரத்தை அஜித் அகார்கர் எவ்வாறு கையாண்டார் என்பதை பார்த்து நான் ரசித்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு சமியை அகார்கர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கத்தை அளித்து இருப்பார் என நம்புகிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக விளையாடிய உத்தரகாண்ட் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

Story first published: Monday, October 20, 2025, 15:19 [IST]
Other articles published on Oct 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+