Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி நாடகம் போடுகிறார்.. மகளுக்கு இலவச பொருட்களை வாங்கித் தந்தார்.. மனைவி ஹாசின் விளாசல்

மும்பை: முகமது ஷமி சமீபத்தில் தனது மகளை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்ததாகக் கூறி அவருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜகான் இடையே மோதல் எழுந்த பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன் பின் தனது மகளை நேரில் பார்த்தே பல மாதங்கள் ஆகின்றன என முகமது ஷமி சில மாதங்களுக்கு முன்பு பேட்டியில் கூறி இருந்தார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது மகளை சந்தித்த ஷமி அவருடன் ஷாப்பிங் சென்று இருந்தார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். அதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறார் ஹாசின் ஜகான். இவை அனைத்துமே வெறும் நாடகம் என்றும், பாஸ்போர்ட்டில் கையெழுத்து வாங்கவே தனது மகள், ஷமியை சந்தித்தார் எனவும், ஆனால், கையெழுத்து போடாமல் அவரை ஷாப்பிங் அழைத்துச் சென்றார் எனவும் கூறி இருக்கிறார்.

mohammed shami

மேலும், தனது மகள் கேட்டது எதையும் வாங்கித் தராமல், எந்த கடையில் தான் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த தேவையில்லையோ அந்த கடைக்கு மட்டுமே அவரை அழைத்துச் சென்றார் என்றும் கூறி இருக்கிறார். இது குறித்து ஹாசின் ஜகான் பேசியது - "உலகிற்கு ஸீன் காட்டுவதற்காகவே ஷமி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். எனது மகளின் பாஸ்போர்ட் காலம் முடிந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டுக்கு ஷமியின் கையெழுத்து தேவைப்பட்டது. அதற்காகவே எனது மகள் அவரது தந்தையை சென்று சந்தித்தார்."

"ஆனால், ஷமி கையெழுத்து இடவில்லை. எனது மகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் மாலுக்கு சென்று இருக்கிறார். ஷமி எந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்கிறாரோ, அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அந்த கடையில் இருந்து எனது மகள் ஷூ மற்றும் உடைகளை வாங்கினார். ஷமி அந்த கடையில் இருந்து வாங்கும் எந்த பொருளுக்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. அதற்காகத்தான் அங்கே அழைத்து சென்று இருக்கிறார். எனது மகள் கிட்டார் மற்றும் கேமரா வேண்டும் என விரும்பினார். ஆனால், அவற்றை அவர் வாங்கித் தரவில்லை."

"ஷமி எப்போதும் எனது மகளை பற்றி விசாரித்ததே இல்லை. அவர் எப்போதும் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு என் மகளை அவர் சந்தித்து இருந்தார். ஆனால், அப்போது எதையும் பதிவிடவில்லை. ஆனால், இப்போது சமூக வலைதளத்தில் பதிவிட வேறு எந்த வீடியோவும் இல்லை என்பதால் இப்போது அதை பதிவிட்டு இருக்கிறார்." என்றார் ஹாசின் ஜகான்.

Story first published: Friday, October 4, 2024, 10:21 [IST]
Other articles published on Oct 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+