Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே!! டி20யும் போச்சு.. ஒன்டேவும் போச்சு.. சிராஜ் உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே!

அடிலெய்டு: இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியில் இந்த போட்டியில் அறிமுகமான முஹம்மது சிராஜ் பரிதாப சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

தன் அறிமுக போட்டியில் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய முஹம்மது சிராஜ், இந்த போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் சில சோதனையான சாதனைகளை செய்துள்ளார்.

பரிதாப சாதனை

பரிதாப சாதனை

சிராஜ் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 76 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அளவில் தன் அறிமுகப் போட்டியில் மிக அதிக சராசரியுடன் ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர் என்ற பரிதாப சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ்.

சராசரி அதிகம்

சராசரி அதிகம்

சிராஜ், தன் அறிமுகப் போட்டியில் 10 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து அதிக சராசரியில் (7.60) முதல் இடத்தை பிடித்தார். இதற்கு முன் கார்சன் காவ்ரி 1975இல் தன் அறிமுகப் போட்டியில் 11 ஓவர்களில் 83 ரன்கள் (சராசரி 7.54) விட்டுக் கொடுத்ததே அதிகமாக இருந்தது.

டி20 அறிமுகம்

டி20 அறிமுகம்

சிராஜ் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாமல் டி20 போட்டியிலும் தன் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர் என்ற பரிதாபத்தை சந்தித்துள்ளார்.

57 ரன்கள் கொடுத்த சிராஜ்

57 ரன்கள் கொடுத்த சிராஜ்

2017ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சிராஜ், அந்த போட்டியில் 57 ரன்கள் கொடுத்தார். அதுவே இந்திய அளவில் மிக மோசமான அறிமுக பந்துவீச்சு ஆகும்.

Story first published: Wednesday, January 16, 2019, 18:34 [IST]
Other articles published on Jan 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+