Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தந்தை மரணம்.. தோள் கொடுக்க ஆளில்லை; தனி ஆளாக 14 நாட்கள் சித்ரவதை - சிராஜ் அனுபவித்த கொடுமை

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் முகமது சிராஜ்.

Recommended Video

தந்தை மரணம்.. ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை.. Australia-வில் Siraj அனுபவித்த கொடுமை

அவரது இன்டெண்ட் மிகத் தெளிவாக இருந்தது. ஷார்ப்பாக, க்ரிஸ்ப்பாக, துல்லியமாக தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்தை திணறடித்தார்.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட், இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கெட் என இங்கிலாந்து அணியை சர்வநாசம் செய்ததில் முக்கியமானவர் சிராஜ்.

சரண்டரான இங்கிலாந்து

சரண்டரான இங்கிலாந்து

அதிலும், மொயீன் அலியை அவுட்டாக்கி, அடுத்த பந்தே சாம் கர்ரனை அவுட்டாக்கியது எல்லாம் கண்கொள்ளா காட்சி. கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் குறித்து 'Mission Domination: An Unfinished Quest' என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. பிரபல விளையாட்டு ஆசிரியர்கள் போரியா மஜூம்தார் மற்றும் குஷன் சர்கார் ஆகியோர் இந்த புத்தகத்தை இணைந்து வெளியிட்டனர். இதில், பல சுவாரஸ்யமான, முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தனிமையில் சிராஜ்

தனிமையில் சிராஜ்

அதில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் சிராஜும் இடம் பெற்றிருந்தார். இதற்காக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். அப்போது உடல்நலம் குன்றிய சிராஜின் தந்தை காலமானார். இதுகுறித்து அந்த புத்தகத்தில், "நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட போது சிராஜ் தனது தந்தையை இழந்தார். ஆனால், அப்போது கடுமையான குவாரண்டைன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால், சக அணியினர் யாரும் சிராஜின் அழுகைக்கு தோள் கொடுக்க முடியவில்லை. குறைத்தபட்சம் சிராஜின் அறைக்கு கூட வீரர்கள் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் குவாரண்டைன் விதிமுறைகளை மீறாமல் இருக்க, ஒவ்வொரு அறைக்கும் வெளியே போலீசார் இருந்தனர். இந்திய அணியால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக, வீரர்கள் அனைவரும் வீடியோ கால் வாயிலாக சிராஜுடன் பேசிக் கொண்டே இருந்தனர். தந்தை இழப்பு காரணமாக, சிராஜ் தனக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் என்று வீரர்கள் கவலை கொண்டனர்.

சிராஜுக்கு சிகிச்சை அளிக்க பிசியோ மட்டுமே அவரது அறைக்கு செல்ல முடியும்,

மிகப்பெரிய வாய்ப்பு

மிகப்பெரிய வாய்ப்பு

சிராஜ் பல சந்தர்ப்பங்களில் உடைந்துவிட்டார், இது இயற்கையானது. ஆனால் அவர் உறுதியாகவும் இருந்தார். இந்தியாவுக்காக தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்ற தனது தந்தையின் விருப்பத்தை அவர் நிறைவேற்ற விரும்பினார். பாக்சிங் டே டெஸ்டின் மிகப்பெரிய சந்தர்ப்பத்தில் மெல்போர்னில் விளையாட வாய்ப்பு வந்தபோது, அவர் அதை விட்டுவிட விரும்பவில்லை.

அதிக விக்கெட்டுகள்

அதிக விக்கெட்டுகள்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பு, சிராஜ் சில வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஆனால், அதில் அவரால் சிறப்பாக செயலாற்ற முடியவில்லை. அவர் தோல்வியுற்றதற்காக தன்னைத் தானே திட்டிக் கொண்டதாக எங்களிடம் தெரிவித்தார். 'வெள்ளை பந்து விளையாட்டுகளில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்' என்று சிராஜ் கூறினார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி, அத்தொடரில் அதிகம் விக்கெட்டுகளை கைப்பற்றியாய் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்" என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்..

Story first published: Thursday, August 19, 2021, 20:53 [IST]
Other articles published on Aug 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+