Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டோ டிரைவரின் மகன்.. செல்லப்பிள்ளை சிராஜ் வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார்.. எல்லாம் உழைப்பு!

ஹைதராபாத்: இந்திய அணியில் கலக்கி வரும் இளம் பவுலர் முகமது சிராஜ் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

Recommended Video

செல்லப்பிள்ளை Siraj வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார் | Oneindia Tamil

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் இளம் வீரர் சிராஜ் வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டுள்ளது. ஐபிஎல்லில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான சிராஜ் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி மக்களின் மனதை கவர்ந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடினார். பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் படையை சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் எடுத்தார்.இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்த சிராஜ் மொத்தமாக ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாய்த்தார். தற்போதெல்லாம் இவரின் பேட்டிங்கும் பெரிய அளவில் மெருகேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதனை

சாதனை

ஆஸ்திரேலிய தொடரில் இவர் இணைந்து சில நாட்களில் இவரின் அப்பா மரணம் அடைந்தார் அப்பாவின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தங்கி ஆடிய சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த நிலையில் இந்தியா திரும்பிய சிராஜ் நேரடியாக தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று மரியாதை செய்தார்.

அப்பா

அப்பா

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் சிராஜை கிரிக்கெட் ஆட இவரின் அப்பாதான் ஊக்குவித்து கிரிக்கெட் ஆட வைத்தார். சிராஜின் அப்பா ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சிராஜ் நீல நிறத்தில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கி இருக்கிறார்.

வருமானம்

வருமானம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் கிடைத்த சம்பளம் மூலம் இந்த காரை சிராஜ் வாங்கி இருக்கிறார். இவரின் அப்பா ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டார். ஆனால் மகனோ கடின உழைப்பால் முன்னேறி தற்போது கார் வாங்கியதோடு, இந்திய அணியிலும் முக்கியமான பவுலராக மாறியுள்ளார்.

பவுலர்

பவுலர்

இவரின் இந்த அசுர வளர்ச்சியை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் இது. இப்படித்தான் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். சரியான வாய்ப்புகளை கொடுத்தால் அவர்களும் முன்னேறி வருவார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Saturday, January 23, 2021, 13:55 [IST]
Other articles published on Jan 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+