Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிராஜ் அசத்தல் கம்பேக்.. இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு.. சேஸ் செய்ய முடியுமா? பிட்ச் நிலவரம் என்ன?

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அசத்திய பவுலர்கள்

அசத்திய பவுலர்கள்

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஓப்பனர்களுக்கு இந்திய பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். குயிண்டன் டிக்காக் 5 ரன்களுக்கும், ஜென்னிமான் மாலன் 25 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். பவர் ப்ளேவில் கெத்து காட்டிய இந்திய பவுலர்களால் மிடில் ஓவர்களில் சோபிக்க முடியவில்லை. 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரீசா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் தூண் போல நிலைத்து நின்றனர்.

மிடில் ஓவர் விக்கெட்கள்

மிடில் ஓவர் விக்கெட்கள்

சிறப்பாக விளையாடிய ஹெண்ட்ரிக்ஸ் 74 (76) மற்றும் எய்டன் மர்க்ரம் 79 (89) ரன்களை குவித்தனர். இதனால் 40 /2 என இருந்த ஸ்கோர் 169/3 என மாறியது. நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க போராடிய இந்திய பவுலர்களுக்கு 30 ஓவர்களுக்கு பின் தான் சாதகமான சூழல் இருந்தது. ஹெய்ன்ரிச் க்ளாசன் 30, வெயின் பர்னெல் 16, கேசவ் மகாராஜ் 5 என மளமளவென தென்னாப்பிரிக்காவின் விக்கெட்கள் சரிந்தன.

மில்லரின் அதிரடி

மில்லரின் அதிரடி

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய டேவிட் மில்லர் 34 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் மோசமாக செயல்பட்ட முகமது சிராஜ் இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி வெறும் 38 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சேஸ் செய்ய முடியுமா?

சேஸ் செய்ய முடியுமா?

ராஞ்சி மைதானத்தின் பவுண்டரி எல்லை தூரம் மிகவும் சிறியது தான். இந்த பிட்ச்-ஐ பொறுத்தவரையில் 2வது இன்னிங்ஸில் பந்தில் பெரியளவில் வேகம் கிடைக்காது எனத் தெரிகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக பந்தை கணித்து தூக்கி அடிக்க வேண்டும். இல்லையெனில் கேட்ச்-ஆகும். மற்றொருபுறம் இங்கு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்கள் கைநழுவி சரியான லைன் லெந்த்தில் போடமுடியாமல் தவிக்கலாம். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகம். மொத்தத்தில் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆட வேண்டும்.

Story first published: Sunday, October 9, 2022, 20:33 [IST]
Other articles published on Oct 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+