Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 ஸ்டார் ஜெயிலில் இருந்த சிராஜ்.. தந்தை இறுதி சடங்குக்கு கூட போகவில்லை.. முன்னாள் பயிற்சியாளர் வேதனை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், தனது தந்தை இறுதிச் சடங்கு கூட செல்ல முடியாமல் தவித்ததாக முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பையில் சிராஜ் 23 விக்கெட் வீழ்த்தி, அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்று பெருமையை பெற்றார்.

அது மட்டும் இல்லாமல் சிராஜ் டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரை இந்தியா சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், சிராஜ் குறித்து பேசிய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது சிராஜ்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

Mohammed siraj

அந்த தொடரின் போது கோவிட் உச்சக்கட்டத்தில் இருந்து. பயோ பபிள் முறை மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் சிராஜின் தந்தை உயிரிழந்ததால் அவரை பார்க்க கூட செல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், உண்மையை செல்ல வேண்டும் என்றால் அது ஐந்து நட்சத்திர ஜெயில் போல் இருந்தது.

சிராஜை பார்க்க யாருக்குமே அனுமதி அளிக்கப்படவில்லை. அணியின் மேலாளர் மட்டும்தான் ஸ்பெஷல் அனுமதி வாங்கி சிராஜை நேரில் சென்றார். அப்போது whatsapp தான் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. நாங்கள் அனைவரும் சிராஜை whatsapp வீடியோ காலில் தொடர்பு கொண்டு சிராஜிடம் அதிகம் பேசினோம். என்னதான் வீடியோ காலில் பேசினாலும் அருகில் ஒரு நபர் இருந்து தோளோடு தோள் சாய்த்து, அவருக்கு ஆறுதல் சொல்வது போல் இதில் எதுவும் வராது.

சாய்ந்து கொண்டு அழுவதற்கு கூட ஒரு நபர் சிராஜ் அருகில் இல்லை. ஆனால் நாங்கள் சிராஜை நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்தோம். ஆனால் சிராஜ் நான் இந்தியாவுக்கு செல்லவில்லை என்றும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலே தங்குகிறேன் என்றும் கூறியிருந்தார். மேலும் தனது தந்தை நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்பியதாகவும் தந்தைக்காக தான் ஆஸ்திரேலியாவில் தங்குகிறேன் என்று முடிவெடுத்தார். சிராஜின் அந்த முடிவு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது என்று பரத் அரூண் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 31, 2025, 9:41 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+