Siraj Prize Gift:ஆட்டநாயகன் பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்..எத்தனை லட்சம் தெரியுமா?
கொழும்பு : ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி இவ்வளவு எளிதாக ஒரு தலைப்பட்சமாக அமையும் என்று இந்திய ரசிகர்களை கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்.
முதலில் பந்து வீச பணிக்கப்பட்ட இந்திய அணி 50 ரன்களில் எல்லாம் இலங்கையை சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் முகமது சிராஜ் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் இலங்கை அணியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். இந்த ஷாக்கிலிருந்து இலங்கை அணி மீளவே இல்லை. இந்த நிலையில் முகமது சிராஜ் ஆறு விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் வீழ்த்தினார்.

இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதில் அவருக்கு கிடைத்த பரிசு தொகையை தான் மைதான ஊழியர்களுக்கு வழங்க விரும்புவதாக அறிவித்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மைதான ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் தாம் பேசும்போது இந்த பரிசு என்னை விட மைதான ஊழியர்களுக்கு தான் சரியாக இருக்கும்.
ஏனென்றால் அவர்கள் மட்டும் தங்களது பணியை செய்யவில்லை என்றால் இந்த தொடரை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்காது என்று சிராஜ் கூறினார். சிராஜின் இந்த செயலுக்கு ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய சிராஜ் நான் கடந்த சில மாதங்களாகவே நன்றாக பந்து வீசி வருகிறேன். என்னுடைய பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டில் பந்து படாமல் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் எட்ஜ் ஆனார்கள். இதன் மூலம் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தது.
பேட்ஸ்மேன்கள் எப்படி பந்து வீசினால் நெருக்கடியை உணர்வார்களோ அந்த வகையில் பந்து வீச விரும்பினேன். நான் அமைத்த பிளான் படி சரியான முறையில் பந்து வீசினேன். முதலில் ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது. அதனால் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல ஒரு நட்புணர்வு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு முனையில் அழுத்தம் ஏற்பட்டால் மறுமுனையில் விக்கெட்டுகளை நாங்கள் எளிதாக எடுக்குகிறோம். அது அணிக்கும் நன்மையை தருகிறது. என் வாழ்நாளில் நிச்சயமாக இது சிறந்த ஒரு பந்துவீச்சாக நான் கருதுகிறேன் என்று சிராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications