Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Mohammed siraj- பிக் பாஸ் பிரபலத்துடன் கிரிக்கெட் வீரர் சிராஜ்-க்கு காதல்.. இருவரும் ஜோர் டேட்டிங்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பிக் பாஸ் பிரபலத்தை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்ந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் சிராஜ் முதல் இடத்தில் இருந்தார். இந்த சூழலில் கடந்த சில காலமாக சிராஜின் பந்து வீச்சில் தோய்வு ஏற்பட்டிருந்தது. எனினும் பார்டர் கவாஸ்கர் தொடரில் சிராஜ் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

mohammed siraj india vs england

இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சிராஜ் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த தருணத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் சிராஜ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் சிராஜ், பிக் பாஸ் பிரபலமான மகிராவுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிக் பாஸில் கலந்து கொண்ட மகிரா காஷ்மீரை சேர்ந்தவர்.இவர் பல்வேறு பஞ்சாப் திரைப்படங்களிலும்,ஆல்பம் சாங்கிலும் நடித்திருக்கிறார்.இந்த நிலையில் இருவரும் காதலித்து டேட்டிங் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் மூலம் தான் இந்த காதல் தொடங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் மஹிராவின் தாய் சானியா சர்மா,இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "என்ன நீங்கள் பேசுகிறீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது".

"சிராஜுக்கும் மகிரா சர்மாவுக்கும் எந்த ஒரு காதலும் இல்லை.மக்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள் என்னுடைய மகள் ஒரு பிரபலமானவர் இதனால் யாருடனும் ஆவது தொடர்பு படுத்தி மக்கள் பேச தான் செய்வார்கள் இதையெல்லாம் நாங்கள் நம்ப முடியுமா இந்த செய்தி முற்றிலும் தவறானது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Story first published: Wednesday, January 29, 2025, 23:35 [IST]
Other articles published on Jan 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+