Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயிரை கொடுத்து பவுலிங் போட்டாரே.. அவரை போய் இப்படி கழட்டிவிட்டுடீங்களே கோலி.. கொதிக்கும் வீரர்!

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் இளம் பவுலருக்கு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.யாரும் எதிர்பார்க்காத வகையில் அணிக்குள் நதீம் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் இன்று ஆடும் இந்திய அணியில் 5 பவுலர்கள் உள்ளனர். இரண்டு ஸ்பீட் பவுலர்கள், மூன்று ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் ஸ்பீட் பவுலர்களாக களமிறங்கி உள்ளனர்.

களமிறங்கினார்கள்

களமிறங்கினார்கள்

இந்திய அணியில் இன்று சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆஸ்திரேலியா தொடரில் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான முகமது சிராஜ் மிகவும் சிறப்பாக ஆடினார். பும்ரா, ஷமி இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் படையை சிறப்பாக வழி நடத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

பவுலிங்

பவுலிங்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்த சிராஜ் மொத்தமாக ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சாய்த்தார்.தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சிராஜ் இந்த சாதனையை செய்துள்ளார்.

மோசம்

மோசம்

ஆனால் தற்போது சிராஜ் அணியில் எடுக்கப்படவில்லை. மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். மூன்று ஸ்பின் பவுலர்கள் களமிறங்க வேண்டும் என்பதால் சிராஜுக்கு பதிலாக நதீம் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்.

Story first published: Friday, February 5, 2021, 10:29 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+