வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்து. இதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக தடுமாறினர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் ரோகித் சர்மா 80 ரன்களையும் விளாசினர். மேலும் ஜெய்ஸ்வால் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த போராடினர்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பாயும் தலவாணியும் மட்டும்தான் எடுத்து வரவில்லை. களத்திலேயே ரன் அடிக்காமல் பந்துகளை வீணடித்து, இந்திய அணி வீரர்களின் வெறுப்பேற்றினர். இதில் பிராத்வெயிட் 235 பந்துகளைப் பிடித்து 75 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தேஜ்நரைன் சந்திரபால் 33 ரன்களிலும், அறிமுக வீரர் மெக்கன்சி 32 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணியின் எத்தனைஸ் மட்டும் 37 ரன்கள் சேர்த்தார்.
229 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது ஆனால் இன்று இந்திய அணி தங்களுடைய திட்டத்தையே மாற்றியது. நேற்று எல்லாம் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து அட்டாக் செய்த ரோகித் சர்மா இன்று வேதப்பந்துவீச்சாளர்களை வைத்து காயை நகர்த்தினார். பந்தை சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் நன்றாக ஸ்வீங் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தடுமாறினர். சிராஜ் தன்னுடைய அ பறக்கும் பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
சிராஜின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக அந்த அணி 285 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 183 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் தான் எஞ்சி உள்ளது. இதனால் இந்திய அணி இன்று அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை நிர்ணயித்து இன்று டிக்ளர் செய்துவிடும்.