Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓடிச் சென்று கட்டிபிடித்துக் கொண்ட சிராஜ்..போட்டிக்கு இடையே டிப்ஸ் கொடுத்த வீரர். சுவாரசிய சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் முகமது சிராஜ் இன்று சிறப்பாக பவுலிங் செய்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி உள்ளது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது..முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் முகமது சிராஜ் இன்று சிறப்பாக பவுலிங் செய்தார். இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாகவே இருந்தது. முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ் சரியாக பந்து வீசவில்லை. இதனால் உணவு இடைவேளைக்கு பின் முகமது சிராஜுக்கு ஓவர் கொடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் இருந்து சிறப்பாக பந்து வீசினார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று மாற்றி மாற்றி பவுலிங் செய்தார். தொடக்கத்திலேயே அதிக அளவில் பவுன்சர் வீசி ஆதிக்கம் செலுத்தினார். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மார்னஸுக்கு அடுத்தடுத்து பவுன்சர் பந்துகளை சிராஜ் வீசினார்.

மார்னஸ்

மார்னஸ்

இதன் மூலம் திட்டமிட்டு மார்னஸ் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். அதேபோல் கேமரூன் கிரீன் விக்கெட்டையும் சிராஜ் இன்று எடுத்தார். இரண்டு கேட்ச் பிடித்து பீல்டிங்கும் நன்றாக செய்தார். இந்த போட்டிக்கு பின் முகமது சிராஜ் வேகமாக சென்று இந்திய அணியின் பவுலிங் கோச் பாரத் அருணை கட்டிபிடித்துக் கொண்டார்.

பாரத் அருண்

பாரத் அருண்

பவுலிங் கோச் பாரத் அருண்தான் சிராஜுக்கு சிறப்பு பயிற்சி அளித்து இருந்தார். இதனால் சிராஜ் வேகமாக ஓடிய பாரத் அருணை கட்டிபிடித்துக் கொண்டார். இதுபோக மூத்த வீரர் ஹனுமா விஹாரியும் சிராஜுக்கு போட்டிக்கு இடையே டிப்ஸ் கொடுத்தார். சிராஜ் முதல் தர போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு அறிமுகம் ஆன போது ஹனுமா விஹாரிதான் அந்த அணியின் கேப்டன்.

சிராஜ் பவுலிங்

சிராஜ் பவுலிங்

சிராஜுக்கு ஹனுமா விஹாரி மிகவும் நெருக்கம். இதனால் போட்டிக்கு இடையே சிராஜுக்கு ஹனுமா விஹாரி தொடர்ந்து அறிவுரை வழங்கி உள்ளார். இதன் பயனாக இன்று சிராஜ் 2 விக்கெட் எடுத்துள்ளார். அறிமுக போட்டியிலேயே இவர் இரண்டு விக்கெட் எடுத்த நிலையில்.. டெஸ்ட் அணியில் இவருக்கு எதிர்காலத்தில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, December 26, 2020, 15:00 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+