2வது சண்டை ஆரம்பிச்சிருச்சே.. சிராஜ் vs ஷாண்டோ இடையேயான போர்.. வெற்றி பெற்றது யார்??
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடியதால் 513 ரன்கள் என்ற கடினமான இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி
இந்நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தாண்டி முகமது சிராஜ் - ஷாண்டோ ஆகியோரின் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது சிராஜிடம் நஷ்மல் ஹொசைன் ஷாண்டோ ஏதோ சீண்ட இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.

சிராஜின் பதிலடி
இதனால் ஆத்திரமடைந்த சிராஜ், அதே ஓவரில் ஷாண்டோவின் ஸ்டம்ப்களை பதம் பார்த்து உடனடி பதில் கொடுத்தார். அப்போது சிராஜுடன் சேர்ந்து விராட் கோலியும் ஷாண்டோவை கேலி செய்து வழி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த பிரச்சினை முடிந்தது என்று பார்த்தால், 2வது இன்னிங்ஸிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

2வது இன்னிங்ஸ் ஆட்டம்
வங்கதேசத்தின் ஓப்பனிங் வீரர்களான ஹொசைன் ஷாண்டோ மற்றும் சாகீர் ஹாசன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். அப்போது ஷாண்டோவை அவுட்டாக்கியே தீர வேண்டும் என முடிவெடுத்த முகமது சிராஜ், தொடர்ச்சியாக அதிவேகமாக பந்துகளை வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.

சிறப்பான அரைசதம்
ஷாண்டோவுக்கு சிராஜ் வீசிய பெரும்பாலான பந்துகள் நூழிழையில் மிஸ்ஸானது. இதனால் அவரின் பந்துகளை சமாளிக்க ஷாண்டோ திணறியது தெளிவாக தெரிந்தது. எனினும் அதனை எதிர்த்து சமாளித்து 67 ரன்களை குவித்து உமேஷிடம் அவுட்டானார். இதனால் இவர்களின் சண்டை 2வது டெஸ்டிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications