Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையில் பொளேர் என பட்ட பந்து.. சுருண்டு விழுந்த ஜாம்பவானின் மகன்.. லங்கா ப்ரீமியர் தொடரில் பரபரப்பு!

இலங்கை: பாகிஸ்தான் ஜாம்பவான் மொயீன் கானின் மகன் அசாம் கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு தொடரான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் கடந்த டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 9வது லீக் போட்டியில் கல்லே க்ளாடியேட்டர்ஸ் மற்றும் காண்டி ஃபால்கான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தான் யாரும் எதிர்பார்க்காத துயர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மொயீன் கானின் மகன்

மொயீன் கானின் மகன்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான மொயீன் கானின் மகன் அசாம் இதில் கல்லே கிளாடியேட்டர்ஸின் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். காண்டி ஃபால்கோன்ஸ் அணியின் இன்னிங்ஸின் போது ஆட்டத்தின் 16வது ஓவரை நுவான் பிரதீப் வீசினார். அப்போது பேட்ஸ்மேன் தவறவிட்ட பந்து, துரதிஷ்டவசமாக அசாமின் தலையிலேயே பலமாக பட்டது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

ஸ்டம்புகளுக்கு பின்னால் நீண்ட தூரத்தில் நிற்காமல் இருந்த அசாம், பந்து மெதுவாக கீழாக வரும் என நினைத்து கீழே குணிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக வேகமாக வந்துவிட்டதால், உச்சி தலையிலேயே பந்து பட்டு, அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். வலி தாங்க முடியாமல் கதறிய அவரை உடனடியாக மைதான அதிகாரிகள் ஸ்ட்ரக்சர் மூலம் தூக்கிச்சென்றனர்.

காய பாதிப்பு

காய பாதிப்பு

வேகப்பந்துவீச்சாளர்கள் பொதுவாக 135 - 140 கிமீ வேகத்தில் வீசுவார்கள். அந்த வேகத்தில் தலையில் பட்டுள்ளதால், மருத்துவமனையில் அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகலாம்.

 வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

அசாமின் இந்த போராட்டத்தை கல்லே அணியினரும் வீணாக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த கல்லே அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இதன்பின்னர் ஆடிய காண்டி ஃபால்கான்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெறும் 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் கல்லே அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, December 13, 2022, 17:28 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+