For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதி போட்டிக்கு இடையில்.. மைதானத்திற்குள் வந்த ராட்சச விலங்கு.. பதறிய வீரர்கள்.. ஷாக்கிங் சம்பவம்!

கொழும்பு: இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் வித்தியாசமான விலங்கு ஒன்று வந்தது.

இலங்கைக்கும் இங்கிலாந்திற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கேல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது.

இதனால் இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய தீவிரத்தோடு இலங்கை அணி ஆடி வருகிறது. ஆனால் இலங்கை அணியின் பேட்டிங் இரண்டாவது டெஸ்டிலும் சொதப்பி வருகிறது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 344 ரன்கள் எடுத்தது. பின் மீண்டும் பேட்டிங் இறங்கிய இலங்கை அணி 126 ரன்களுக்கு அவுட் ஆனது.

அவுட்

அவுட்

இந்த நிலையில் தற்போது 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிவருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று மைதானத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதன்படி நேற்று இலங்கை அணி பீல்டிங் செய்த போது மைதானத்திற்குள் வித்தியாசமான விலங்கு ஒன்று வந்தது.

விலங்கு

விலங்கு

பவுண்டரி லைன் அருகே ராட்சச உடும்பு ஒன்று வந்துள்ளது. பவுண்டரி லைனுக்கு அருகே இந்த உடும்பு நகர்ந்து சென்றுள்ளது. இதை கவனித்த வீரர்கள் உடனே ஆட்டத்தை நிறுத்திவிட்டு உடும்பை வேடிக்கை பார்க்க சென்றுவிட்டனர். உடும்பு சரியாக பவுண்டரி லைனில் நின்றது.

தடைபட்டது

தடைபட்டது

இதனால் ஆட்டம் சில நிமிடம் தடைபட்டது. அதன்பின் காவலர்கள் வந்து உடும்பை தூக்கி சென்றனர். உடும்பை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த உடும்பு எப்படி மைதானத்திற்குள் வந்தது.பாதுகாப்பை மீறி இவ்வளவு பெரிய விலங்கு உள்ளே வந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Story first published: Monday, January 25, 2021, 15:54 [IST]
Other articles published on Jan 25, 2021
English summary
Monitor Lizard came inside the ground during Sri Lanka vs England match yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+