Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு தான் மரியாதை அதிகம்.. கோலி - ரவி சாஸ்திரி இடையே கலகத்தை ஏற்படுத்தும் முன்னாள் வீரர்- காரணம்

இங்கிலாந்து: இந்திய அணியில் கோலியை விட ரவி சாஸ்திரிக்கு தான் மரியாதையும், அதிகாரமும் அதிகம் உள்ளதாக முன்னாள் வீரர் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக தயாராகி வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டி குறித்து நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் விராட் கோலிக்கும் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் சண்டையை மூட்டி விட்டுள்ளார்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த அனைத்து தொடர்களிலும் இளம் வீரர்களை கொண்டும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு காரணம் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரியின் சரியான காம்போ தான் எனக்கூறப்படுகிறது.

கோலி - சாஸ்திரி காம்போ

கோலி - சாஸ்திரி காம்போ

இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.

ரவி சாஸ்திரி அணி

ரவி சாஸ்திரி அணி

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு விராட் கோலி காரணம் இல்லை என்றும் ரவிசாஸ்திரி மட்டுமே காரணம் என மாண்டி பனேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் கடந்த சில போட்டிகளை எடுத்து அலசிப்பார்த்தால் அது கோலியின் அணி அல்ல சாஸ்திரியின் அணி என்பது தெரியும்.

சாஸ்திரி கொடுத்த ஆச்சரியம்

சாஸ்திரி கொடுத்த ஆச்சரியம்

இந்திய அணியில் தன்னம்பிக்கையை விதைத்து வருவது சாஸ்திரி மட்டுமே ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி வெளியேறிய பிறகும் இந்திய அணி வெற்றி பெற்றது ஆச்சரியமான ஒன்று. அந்த அணியின் முக்கிய வீரர்கள் கூட காயமடைந்தனர். எனினும் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ரவி சாஸ்திரி பின்னால் இருந்து போட்ட திட்டங்களே ஆகும் என பனேசர் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 28, 2021, 18:38 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+