Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர தூக்கிடுங்க.. வெற்றி தானாக வரும்”.. பாகிஸ்தானை வெல்ல அதுதான் சிறந்த வழி.. கோலிக்கு பறந்த அட்வைஸ்

அமீரகம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா என்ன செய்தால் சுலபமாக வெற்றி பெறலாம் என முன்னாள் வீரர் டிப்ஸ் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 24ம் தேதியன்று மாலை துபாயில் நடைபெறவுள்ளது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி வென்றதில்லை. டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இதுவரை 6 முறை மோதி அனைத்திலும் இந்திய அணி வெற்றிக் கண்டுள்ளது. இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முணைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. பாகிஸ்தானின் 2வது ஹோம் கிரவுண்டாக அமீரக களங்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இதனால் இந்திய அணிக்கு சற்று சிரமம் இருக்கலாம்.

முன்னாள் வீரர் அட்வைஸ்

முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்நிலையில் இந்திய அணி எப்படி விளையாடினால் சிறப்பாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். அதில் அவர், இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நிச்சயம் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும். ஏனெனில் பாபர் அசாம் பேட்டிங்கில் நிலைத்து விட்டால் ரன்கள் ஏராளமாக வந்துவிடும்.

சாஹீன் அஃப்ரிடி

சாஹீன் அஃப்ரிடி

அதேபோன்று சாஹீன் அப்ரிடி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இந்திய ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வலதுகை வீரர்களுக்கு தொடக்கத்திலேயே சிரமத்தை கொடுப்பார். எனவே குறைந்த ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டிவிட்டால் சாஹின் அஃப்ரிடி ஓவரில் அழுத்தம் இருக்காது. அதற்கு பாபர் அசாம் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினாலே போதும். தற்போது உள்ள நிலைமையில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

அமீரகம்

அமீரகம்

உலகின் எப்படிபட்ட அணியையும் வீழ்த்தும் வலிமையுடன் பாகிஸ்தான் அணி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போதுமே பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருவதால் அன்றைய நாள் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தால் பாகிஸ்தான் எப்பேர்பட்ட அணியும் விழ்த்தும் வலிமை இருக்கும் என்று மாண்டி ஃபனேசர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 21, 2021, 22:21 [IST]
Other articles published on Oct 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+