தல தோனி, தளபதி கோலி..!! இங்கிலாந்துக்கு எதிராக யாரும் செய்யாத சாதனை... உங்களுக்காக வெயிட்டிங்
எக்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தோனியும், கோலியும் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடக்கத்தில் இருந்தே, இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. தாம் ஆடிய 6 ஆட்டங்களில் கோலி அற்புதமாக விளையாடி வருகிறார். இதுவரை தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 72, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67 ரன்களை எடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 82 ரன்களும் கோலி ஸ்கோர் செய்துள்ளார். கோலி தவிர்த்து ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் உலக கோப்பையில் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்துள்ளனர்.

அரைசதம் சாதனை
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக மற்றொரு அரை சதம் அடித்தால், ஸ்மித்துடன் கோலி இணைந்துவிடுவார். ஏன் என்றால் உலக கோப்பை போட்டியில் 5 அரைசதங்களுக்கு மேல் ஸ்மித் அடித்திருக்கிறார். தற்போது கோலி, 2வது வீரராக இணைவார்.

முதல் கேப்டன் கோலி
மேலும், உலக கோப்பையில் இதுபோன்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய கேப்டன் கோலி என்று பெயரையும் பெறுவார். இதற்கு முன்பாக, 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது அசாருதீன் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடித்திருந்தார்.

உலககோப்பையில் 1,000 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோலி 97 ரன்கள் எடுத்தால், உலக கோப்பை போட்டியில் ஆயிரம் ரன்கள் சேர்த்த 3வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெயரை பெறுவார். முன்னதாக, சச்சின் 2,278 ரன்கள், கங்குலி 1,238 ரன்கள் எடுத்து அந்த சாதனையை படைத்திருந்தனர்.

முறியடிப்பார் கோலி
மேலும், 50 எடுத்தால், இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக டிராவிட் அடித்துள்ள ரன்களை கோலி முறியடிப்பார். டிராவிட் இங்கிலாந்துக்கு எதிராக 1,238 ரன்கள் எடுத்திருக்கிறார். தற்போது கோலி 1,189 ரன்கள் சேர்த்துள்ளார். டிராவிட்டின் சாதனையை முறியடிக்க இன்னும் 50 ரன்கள் கோலிக்கு தேவை.

தோனியின் சாதனை
தோனி இன்னும் 20 ரன்கள் சேர்த்தால் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களில் யுவராஜ்சிங் 1,523 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். தோனி 1,504 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 20 ரன்கள் சேர்த்தால் யுவராஜ் சிங்கின் சாதனையை தல தோனி முறியடிப்பார்.


Click it and Unblock the Notifications