யம்மாடி..!! உலக கோப்பையை காண முண்டியடிக்கும் ரசிகைகள்.. 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை...!!
துபாய்:உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கண்டு ரசிக்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் ரசிகைகள் டிக்கெட் வாங்கி உள்ளனர் என்று ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 லீக் , 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

உலக கோப்பைத் தெடாரைக் காண, உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். அதற்கான டிக்கெட் விற்பனை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகளுக்கு பெரும் அளவிலான டிக்கெட்கள் விற்பனையாகி விட்டன.
டிக்கெட் விற்பனை குறித்து ஐசிசி உலக கோப்பை இயக்குனர் ஸ்டீவ் எல் வொர்த்தி கூறியிருப்பதாவது: 1 லட்சத்திற்கும் மேலான பெண் ரசிகைகள் டிக்கெட்களை வாங்கி உள்ளனர்.
2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளிக்க உள்ளனர். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக, உலக கோப்பை தொடரை காண இளம்வயதினர் அதிகளவு வருவார்கள் என்றார். வழக்கத்துக்க மாறாக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications