Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷி.. நீ ஆடாவிட்டாலும் பரவாயில்லை..".. பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அட்வைஸ்

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.

இதனால் லக்னோவில் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில், அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இதன் காரணமாக வைபவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது. ஆசிய விளையாட்டில் சஞ்சு சாம்சனும் ரன் குவிக்கவில்லை என்றாலும் மூத்த வீரர் என்ற அடிப்படையில் அவர் முந்த வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி அணியில் ஆடாவிட்டாலும், மூத்த வீரர்களை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறி இருக்கிறார்.

Morne Morkel Advice to Vaibhav Suryavanshi Ahead of India vs West Indies T20 Series

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், "வைபவ் சூர்யவன்ஷியிடம் அபாரமான திறமை ஒளிந்துள்ளது. ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, இந்திய அணியின் சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் நேரத்தைச் செலவிடுவதே அவருக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும். சீனியர் வீரர்கள் எவ்வாறு போட்டியை அணுகுகிறார்கள், எப்படி இன்னிங்ஸை கட்டமைக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இளம் வீரர்கள் சீனியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தங்களது திறமையை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்கலைனா.. பயந்துபோய் சாம்சனை நீக்கினார்.. கம்பீரை விளாசிய பத்ரிநாத்

வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்கலைனா.. பயந்துபோய் சாம்சனை நீக்கினார்.. கம்பீரை விளாசிய பத்ரிநாத்

ஆசியப் போட்டியில் விளையாடிவிட்டுத் திரும்பிய வீரர்கள் நீண்ட பயணக் களைப்பில் இருப்பதால், அணியின் சேர்க்கை குறித்து ஆலோசித்து வருகிறோம். அதேபோல் குல்தீப் யாதவ் தனது பழைய ரிதத்திற்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காயத்திலிருந்து மீண்டுள்ள மயங்க் யாதவின் அதிவேகப் பந்துவீச்சைக் காண ஆவலாக உள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்து, தனது அசாத்திய உழைப்பால் இந்திய அணிக்குள் நுழைந்துள்ள பிரின்ஸ் யாதவின் முயற்சி பாராட்டுக்குரியது" என்று மோர்கல் தெரிவித்தார்.

Story first published: Tuesday, October 6, 2026, 10:04 [IST]
Other articles published on Oct 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+