Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் பந்தை எதிர்கொள்வதே சிரமம்.. பவுலிங் கோச்சாக கொண்டு வரக்காரணம் அதுதான்.. மோர்கல் பற்றி கம்பீர்!

மும்பை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியுடன் மோர்னே மோர்கல் இணையவுள்ளார். இவருடன் 2027ஆம் ஆண்டு ஒருநாள் தொடர் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கவுதம் கம்பீர் பிடிவாதமாக தனக்கு வேண்டிய பயிற்சியாளர் குழுவை ஒருங்கிணைத்துள்ளதாக பாராட்டுகள் எழுந்துள்ளன. டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் அனுபவம் வாய்ந்த மோர்னே மோர்கல் இந்திய அணிக்கு எப்படியான மாற்றங்களை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND vs AUS Morne Morkel Gautam Gambhir

இந்த நிலையில் மோர்னே மோர்கல் குறித்து கவுதம் கம்பீர் பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில், மோர்னே மோர்கலை பயிற்சியாளராக மட்டுமல்லாமல், கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த போது வீரராகவும் வாங்கி இருக்கிறோம். எனது வாழ்நாளில் எதிர்கொண்ட பவுலர்களில் மோர்னே மோர்கல் தான் அதிக சவால்களுக்கு உட்படுத்தியவர்.

ஒவ்வொரு முறையும் மோர்னே மோர்கலை எதிர்கொண்ட போதும், அவர் நமது அணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கட்டமைத்த போது, பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கலை தான் கம்பீர் கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் 2 ஆண்டுகள் நெருங்கிய நட்பில் இருந்து பணியாற்றி இருக்கின்றனர்.

கவுதம் கம்பீர் கேகேஆர் அணிக்கு மாறிய போதும், மோர்னே மோர்கல் லக்னோ அணியுடன் பணியாற்றி வந்தார். ஆனாலும் மோர்கல் மீதான கம்பீரின் அன்பும், நட்பும் கொஞ்சம் கூட மாறவில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த மோர்கல், ஒப்பந்தம் முடிவதற்கு முன்பாகவே பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் பொறுப்புக்கு வந்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், மோர்னே மோர்கல் எப்படியான மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்பதும், ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி பவுலர்களுக்கு எப்படி நம்பிக்கையளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Story first published: Thursday, August 15, 2024, 8:12 [IST]
Other articles published on Aug 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+