மொர்டஸா குணமடைந்தார்.. கொரோனா போயே போச்சு
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரப் மொர்டஸாவுக்கு வந்த கொரோனாவைரஸ் போய் விட்டது. அவர் குணமடைந்துள்ளார்.
வீட்டுத் தனிமையில் அவர் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் சிகிச்சையில் இருந்து வந்தார். தற்போது அவர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த சோதனையின்போது அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நலமாக இருக்கிறேன். கடவுளின் அருளால் நான் குணமடைந்துள்ளேன். எனக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மொர்டஸா.
வீட்டிலேயே தான் சிகிச்சை பெற்று வந்ததாகவும், பாசிட்டிவ் வந்த அனைவரும் நம்பிக்கையுடன் இருக்குமாறும், நிச்சயம் அவர்களும் குணமடைவர் என்றும் மொர்டஸா கூறியுள்ளார். அனைவரும் இணைந்து இந்த போரில் வெல்வோம் என்றும் மொர்டஸா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவரது மனைவி சுமோனாவுக்கும் கூட கொரோனா வந்திருந்தது. அவர் இன்னும் குணமாகவில்லை. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் அவரும் குணமடைவார் என்றும் மொர்டஸா கூறியுள்ளார்.
மொர்டஸா தற்போது வங்கதேச அரசியல்வாதியாகவும் இருக்கிறார். ஆளும் அவாமி லீக் கட்சியின் சார்பில் எம்பியாகவும் அவர் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications