Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. அஸ்வின் மற்றொரு சாதனை

இந்தூர்: இந்தியா- நியூசிலாந்து நடுவேயான 3வது டெஸ்ட்டில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

27.2 ஓவர்களில் 81 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 20வது முறையாக 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Most 5-wicket hauls in Tests for India

இந்திய அணியை பொருத்தளவில் இந்த பட்டியலில் சுழல் பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். அவர் 35முறை, ஒரு இன்னிங்சில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தபடியாக, மற்றொரு சுழல் வீரர், ஹர்பஜன்சிங் 25 முறையும், வேகப்பந்து ஜாம்பவான் கபில்தேவ் 23 முறையும், இச்சாதனையை படைத்துள்ளனர்.

எனவே இப்பட்டியலில் அஸ்வின் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 211 விக்கெட்டுகளை குவித்துள்ளார். இஷாந்த் ஷர்மாவின் 209 விக்கெட்டுகளை முந்தியுள்ளார் அஸ்வின். இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில், அஸ்வின் 8வது இடத்திலுள்ளார்.

Story first published: Monday, October 10, 2016, 17:54 [IST]
Other articles published on Oct 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+