Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த டாப்-5 பவுலர்கள் இவர்கள்தான்..!

டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசியவர்கள் யார், யார் தெரியுமா.. முதல் ஐந்து இடங்களில் உள்ள வீரர்கள் பற்றியும், அவர்கள் எத்தனை பந்துகளை வீசினர் என்பதையும் பார்க்கலாம்.

  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து பார்த்தால், 5வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் உள்ளார். அவர் வீசிய பந்துகள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 266.
Most balls delivered in international cricket
  • 4வது இடத்தில், உள்ள நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 43 ஆயிரத்து 661 பந்துகளை வீசியுள்ளார்.
  • 3வது இடத்தில் மீண்டும் ஒரு ஆஸ்திரேலியர். அவர் வேறு யாருமல்ல, சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேதான் அது. 51 ஆயிரத்து 347 பந்துகளை அவர் வீசியுள்ளார்.
Most balls delivered in international cricket
  • இந்த பட்டியலில் அனில்கும்ப்ளே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். 2வது இடத்திலுள்ள கும்ப்ளே 55 ஆயிரத்து 346 பந்துகள் வீசியுள்ளார். எப்போதெல்லாம் விக்கெட்டுகள் விழுவதில்லையோ அப்போதெல்லாம், அசாருதீன், சச்சின், கங்குலி போன்ற கேப்டன்கள் இவரைத்தான் திரும்ப திரும்ப பந்து வீச அழைப்பார்கள்.
  • இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் பூர்வீக தமிழரான முத்தையா முரளிதரன். இவர் 63 ஆயிரத்து 132 பந்துகளை வீசியுள்ளார்.
  • இந்த பட்டியலில், மெக்ராத் தவிர மற்ற அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்களாகும்.
  • வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான ஓவர்கள் வீச முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
  • இருப்பினும் மெக்ராத், இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது அவரது உடல் ஆரோக்கியம் பெஸ்ட்டாக இருந்ததை காட்டுவதாக உள்ளது.




Story first published: Tuesday, March 31, 2015, 10:31 [IST]
Other articles published on Mar 31, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+