For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது.. இது அவுட்டா? சொல்லாம கொள்ளாம ரூல்ஸை மாத்திட்டீங்களா?

சிட்னி : ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான செஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விசித்திரமான முறையில் ஒரு விக்கெட் எடுக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளில் கடந்த சில வருடங்கள் முன்பு மாற்றப்பட்ட ஒரு புதிய விதியால் இந்த விக்கெட் வீழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விதி என்ன?

சங்கா வீசினார்

சங்கா வீசினார்

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா - நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் வீரர் சங்கா பந்து வீசினார்.

அடித்து ஆட முயற்சி

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா வீரர் கார்ட்ரைட் 45 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்து நிதானம் காட்டி வந்தார். திடீரென அவர் சங்கா பந்தை அடித்து ஆட முற்பட்டார். அந்த பந்து ஷார்ட் லெக் பீல்டர் ஹெல்மட்டில் மோதி மேலே சென்றது.

இது அவுட்டா?

இது அவுட்டா?

கார்ட்ரரைட் அடித்த திசைக்கு எதிர் திசையில் வந்த பந்தை பந்துவீச்சாளர் சங்கா கேட்ச் பிடித்தார். இதன் மூலம் கார்ட்ரைட் ஆட்டமிழந்தார். இப்படி கூட அவுட் ஆக முடியுமா என பலரும் இந்த விக்கெட்டை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். முன்பு பீல்டர் ஹெல்மட்டில் பந்து பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டால் அது அவுட் ஆக கருதப்படாது.

ஹெல்மட் விதி

ஹெல்மட் விதி

ஆனால், தற்போது பீல்டர் ஹெல்மட்டில் பட்டு பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும் அது அவுட் என்ற விதி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் உள்ளது. இந்த விதி அமலுக்கு வந்த பின்னர் ஹெல்மட்டில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டு ஒரு வீரர் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த ஹெல்மட் விதி அமலுக்கு வர காரணம் 2014இல் ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியுஜஸின் மரணம் தான். அப்போது பிலிப் ஹெல்மட்டில் தாக்கிய பவுன்சர் பந்தால் அவர் உயிரிழந்தார். அதன் பின் ஹெல்மட் தொடர்பான பல விதிகள் கிரிக்கெட்டில் அமலுக்கு வந்தன.

Story first published: Tuesday, February 26, 2019, 18:30 [IST]
Other articles published on Feb 26, 2019
English summary
Most Bizzare wicket in Australia’s Sheffield Shield - Batsman got out after the ball hit helmet of a fielder and caught.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X