சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியின்மூலம் தனது முதல் சர்வதச டெஸ்ட் போட்டியில் விளையாடிய புகோவ்ஸ்கி 62 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய பெலளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசுவதாகவும் ஆனால் அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது சிரமமாக உள்ளதாகவும் வில் புகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியின்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள வில் புகோவ்ஸ்கி 62 ரன்களை அடித்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய பௌலர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும் குறிப்பாக பும்ராவின் தனிப்பட்ட செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் புகோவ்ஸ்கி கூறியுள்ளார். ஆனால் ஸ்பின்னர் ரவி அஸ்வினின் பௌலிங்கை எதிர்கொள்வதே மிகவும் சவாலாக உள்ளதாகவும், அவர் வித்தியாசமான கோணங்களில் பந்துகளை வீசுவதாகவும், இத்தகைய பந்துகளை தான் இதுவரை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.