Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக பேட்ஸ்மேன்களை டக் அவுட்டாக்கிய பவுலர்கள் பட்டியல்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் எப்போதுமே டக் அவுட்டாகி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். ஒரு இரண்டாவது அடித்துவிட்டு மரியாதையுடன் பெவிலியன் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்கவில்லை என்றால் அதனை டக் அவுட் என்று கூறுவது உண்டு.

இப்போது பரவாயில்லை ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனால் ஒரு வாத்து அழுது கொண்டே நடப்பது போல் கிராபிக்ஸ் செய்து நேரலையில் கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆகிய பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

cricket india cricket team

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் ஸ்டேயின் இவர் 114 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கி இருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட்லி. இவர் 129 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆக்கிருக்கிறார்.எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ஷேன் வார்னே. வார்னே இதுவரை 132 பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆக்கி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஷான் போலாக். இவர் 143 முறை பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆக்கியிருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜமீன்தா வாஸ். இவர் 147 முறை பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆகியிருக்கிறார்.

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வக்கார் யூனிஸ். இவர் 148 முறை பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆகியிருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர். இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் 159 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரன். இவரும் 159 முறை பேட்ஸ்மேன்களை டக்அவுட் ஆகியிருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் மெக்ராத். இவர் பேட்ஸ்மேன்களை 176 முறை டக்அவுட் ஆகியிருக்கிறார். இதில் டெஸ்டில் 104 முறையும் ஒரு நாளுக்கு கிரிக்கெட்டில் 71 முறையும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு முறையும் ஆகும். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வசிம் அக்ரம். இவர் அதிகபட்சமாக 189 முறை பேட்ஸ்மேன்களை டக் அவுட் ஆகியிருக்கிறார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 79 முறையும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 110 முறையும் ஆகும்.

Story first published: Monday, September 2, 2024, 23:43 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+