For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2023 அக்டோபர் மாதம் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் யார்? ஓய்வு பெற்றும் பட்டியலில் இருக்கும் வீரர்

மும்பை : இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் யார் மிகவும் பிரபலமாக ஒவ்வொரு மாதமும் இருக்கிறார்கள் என்ற பட்டியலை மாநில வாரியாகவும் ஒட்டுமொட்டு நாட்டையும் சேர்த்தும் பட்டியலை ஓர்மாக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மாதந்தோறும் வெளியிடும்.

இதில் நடிகர் விஜய் பலமுறை நடிகர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று ஷாருக்கான், நடிகர் அஜித், சூர்யா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களும் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

Most popular Sportsperson in India in October 2023 - Ormax Media reports

இதே போன்று உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த விளையாட்டு வீரர் யார் என்ற பட்டியலை தற்போது ஆர்மாக்ஸ் மீடியா வெளியிட்டு இருக்கிறது. தற்போது தல தளபதி ரசிகர்கள் எப்படி சினிமாவில் யார் கெத்து என்று அடித்துக் கொள்வார்களோ, அதை போல் கிரிக்கெட் உலகில் சிறந்த பிரபலமான வீரர் யார் என்று விராட் கோலி ரசிகர்களும் ரோகித் சர்மா ரசிகர்களும் அடித்துக் கொள்வார்கள்.

இதில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற சண்டை இந்தியா முழுவதும் நடக்கும். இந்த நிலையில் இந்தப் பட்டியல் இந்த மோதலுக்கு ஒரு முடிவை கொண்டு வந்திருக்கிறது. இந்த பட்டியலில் கிங் விராட் கோலி தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் சதம் சதமாக அடித்து வந்த நிலையில், அவருடைய பெயர் தான் சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் வீரரின் பெயரை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் மேல் ஆகிறது. கடைசியாக கிரிக்கெட் களத்திற்கு வந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது. அவர்தான் நம்ம தல தோனி. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தோனி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தான். இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்ற ரோகித் சர்மா தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதுவும் அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா பட்டையை கிளப்பி சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 22, 2023, 22:40 [IST]
Other articles published on Nov 22, 2023
English summary
Most popular Sportsperson in India in October 2023 - Ormax Media reports 2023 அக்டோபர் மாதம் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் யார்?ஓய்வு பெற்றும் பட்டியலில் இருக்கும் வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+