ஆசிய கோப்பை கிரிக்கெட் ரெக்கார்ட்ஸ்.. அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்.. முழு விவரம் இதோ
மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். பொதுவாக ஆசிய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவே அதிக முறை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.
ஆனால் வீரர்களின் தனிப்பட்ட ரெகார்டுகளை பார்த்தால் இலங்கை அணி வீரர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஒரு நாள் மற்றும் டி20 என இரண்டு வடிவங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

இதனால் முதலில் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இலங்கை அணியில் அதிரடி வீரர் ஜெயசூர்யா 25 போட்டிகளில் விளையாடி அவர் 1220 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் சங்கக்காரா. அவர் 24 போட்டிகளில் விளையாடி 1075 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். அவர் 23 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் அடித்திருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 17 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 786 ரன்களை அடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா 22 போட்டிகளில் விளையாடி 745 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அவர் 10 டி20 போட்டிகளில் விளையாடி 429 ரன்கள் அடித்திருக்கிறார்.
முகமது ரிஸ்வான் 6 டி20 போட்டிகளில் விளையாடி 281 ரன்களும், ரோகித் சர்மா ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி 271 ரன்களும் அடித்திருக்கிறார்கள். ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரண்டு இந்திய வீரர்கள் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்கள். அது நம் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தான். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணத்துங்கா 1986, 1990,1997 ஆகிய மூன்று ஆசிய தொடர்களிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications