For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களால் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத அபார ஆட்டங்கள்

முமபை : கிரிக்கெட் டெஸ்டுகளில் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வீரரின் சாதனை மட்டும் குறிப்பிட்ட டெஸ்டில் நடைப் பெற்றது உயர்வாக project செய்யப்படும். அவ்வாறு செய்வதற்கு உரிய
சாதனையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

ஆனால் அதே சமயம் கிரிக்கெட் விளையாட்டு ஒரு அணியின் வீரர்களின் கூட்டு முயற்சியில் நடைப் பெறுவது.
அதே டெஸ்டில் வேறு ஒரு அல்லது சில வீரர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்புக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் அவ்வளவாக கிடைக்காமல் போவது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

india national cricket team cricket cricket history sports news interseting facts

அப்படிப்பட்ட சில நிகழ்வுகள் பற்றி.1938. ஓவல் டெஸ்ட். சாதனைப் படைத்தவர். அன்றைய கால கட்டத்தில் உலக ரிகார்டு ஏற்படுத்தியவர் இங்கிலாந்து ஓப்பனிங்ஹ் வீரர் லென் ஹட்டன். மூன்று சதம் எடுத்து அதிக பட்ச தனி வீரர் ஸ்கோர் எடுத்தார். ரன்கள் 364.

இங்கிலாந்து அணி 903/ 7
ஆஸ்திரேலிய அணி
201 & 123

இங்கிலாந்து அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
ஒரு இன்னிங்ஸ் 579 ரன்கள் வித்தியாசத்தில்.லென் ஹட்டனை தவிர இந்த வெற்றிக்கு பெரும் பங்களித்தும் பிரபலப் படுத்தப் படாத வீரர்கள்

மௌரைஸ் லெய்லாந்து
187*

மௌரைஸ் லெய்லாந்து, லென் ஹட்டன் ஜோடி பார்னர்ட்ஷிப்பில் குவித்த ரன்கள் 382.அதே போல் அடுத்த நாட் அவுட் வீரர் ஜோ ஹார்டஸ்டாப் எடுத்த ரன்கள் 169* அவ்வளவாக பேசப் படவில்லை.

பவுலிங்கில் மொத்தம் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்து வீரர் பில் போவ்ஸ் பங்களிப்பு, அடிக்கப் பட்ட ரன்கள் எண்ணிக்கையின் எதிரில் காணாமல் போய் விட்டது.

1958. கிங்ஸ்டன் டெஸ்ட்.

இந்த டெஸ்டில் காரி சோபர்ஸ் தனது முதல் சதத்தை முச்சதமாக அடித்து சாதனை செய்தார். அன்றைய கால கட்டத்தில் அதிக பட்ச ரன்கள் குவித்த தனி வீரர் என்ற சாதனை புரிந்து பெருமை பெற்றார்.
365* ரன்கள்.

790 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுக்களுக்கு
டிக்ளர் செய்த மேற்கு இந்திய தீவுக்கள் அணி இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் 174 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்ட் முடிவில் காரி சோபார்சுக்கு கொடுக்கப் பட்ட மதிப்பு, மரியாதை, முக்கியத்துவம் ஒப்பனிங் வீரர் கோனார்ட் ஹண்ட்டுக்கு அளிக்காதது ஒரு குறை தான்.ஆமாம். அப்படி என்ன செய்தார் கோனார்ட் ஹண்ட்.

துவக்க வீரராக கன்ஹாயுடன் களம் இறங்கிய கோனார்ட் ஹண்ட், நல்ல அடித்தளம் அமைக்க பெரிதும் உதவினார்.
ஹண்ட், சோபார்சுடன் ஜோடி சேர்ந்து மேற்கு இந்திய தீவுக்கள் அணி பெரிய ஸ்கோர் செய்ய பெரிதும் உதவினார்.

இந்த ஜோடி பார்னர்ட்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 446.
ஹண்ட் நின்று ஆடி எடுத்த இரட்டை சதமும் இந்த டெஸ்டின் வெற்றிக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. ஆனால் அவர் எடுத்த 260 ரன்களுக்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை என்பதும் உண்மை.

மேற்கு இந்திய தீவுக்கள் அணி பவுலர் எரிக் ஆட்கின்சன்
கைப்பற்றிய மொத்தம் 7 விக்கெடுக்கள் வெற்றி பெற உதவியிருந்தாலும் அவ்வளவு முக்கியத்துவம் அடையவில்லை.

பாகிஸ்தான் அணியின் இரண்டு சதங் கள் இம்டியாஸ் அஹ்மத் (122 ) , வாசிர் முகம்மது (106 ) எடுபடவில்லை.
1988. அன்றைய மெட்ராஸ் டெஸ்ட். இந்திய அணி வென்றது 255 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக.

இந்திய லெக் ஸ்பின் பவுலர் நரேந்திர ஹிர்வானி அவரது இந்த அறிமுக டெஸ்டில் மொத்தம் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி (ஒவ்வொரு இன்னிங்சிலும் ) தலா 8 விக்கெட்டுக்கள் எடுத்து அசத்தி உலக சாதனை புரிந்தார்.

அவரது இந்த அரிய சாதனை உயர் வாக பேசுப்படுகின்றது.
ஆனால் மற்றும் ஒரு இந்திய வீரர்
ஏற்படுத்திய சாதனை அந்த அளவு முக்கியம் பெற்றதா என்பது கேள்வி குறித்தான்.

அது என்ன சாதனை. யார் நிகழ்த்தியது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கிரன் மோரே இந்த டெஸ்டில் மொத்தம் 6 ஸ்டம்பிங்கள் செய்தார். அதில் இரண்டாம் இனிங்க்சில் மட்டும் 5 ஸ்டம்பிங்கள். இது ஒரு மகத்தான உலக சாதனை.

1999. டெல்லி டெஸ்ட்.

இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணிக்கு எதிராக.
இந்திய லெக் ஸ்பின் பவுலர் அணில் கும்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை புரிந்து புகழின் உச்சிக்கு சென்றார்.

அதே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அருமையாக பேட்டிங் ஆடி ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய தமிழக வீரர் சடகோப்பன் ரமேஷ் அவர்களின் பங்களிப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது நிர்தசனமான உண்மை.
ரமேஷ் அடித்த ரன்கள்
60 & 96.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, October 31, 2024, 12:54 [IST]
Other articles published on Oct 31, 2024
English summary
Most Underrated Performances in cricket history கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்களால் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத அபார ஆட்டங்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+