அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பாண்டில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பிரஷித் கிருஷ்ணாவின் ஃபில்டிங்கில் தவிர மற்ற எந்த குறையும் சொல்ல முடியாது'
போட்டியை சிக்கிரம் முடிக்கனும் என்ற வெறியில் கோலி இரூந்தாரா என்ன என்று தெரியவில்லை. முதல் 2 பந்தில் பவுண்டரி அடித்து 4வது பந்தில் பெரிய ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.

கடந்த சில போட்டிகளாகவே 4வது இடத்தில் அவர் களமிறங்கினார். சிலர் அந்த இடம் அவருக்கு சரி வராது என்றும் ஒரு சிலர், அவரை ஓப்பனிங் இறக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அmனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை இன்று வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு தகுந்தால் போல் பொறுப்பான ஆட்டத்தை பண்ட் வெளிப்படுத்த, 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசி 11 ரன்கள் எடுத்திருநத போது சிவனே என்று எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேட்டிங் செய்த சூர்யா ஒரு ஸ்ட்ரைட் டிரைவ் ஆட , அது நேராக பந்துவீச்சாளரின் காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.
ஆனால் ரிஷப் பண்ட், ரன் ஓடுவதற்காக கிரிஸை விட்டு வெளியே நின்றதால் மோசமான ரன் அவுட்டாக அமைந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரிஷப் பண்ட் எனக்குனே வருவீங்களடா என்ற தோரணையில் பெவிலியன் நோக்கி மெல்ல நடந்தார், அடுத்த போட்டியிலாவது ரிஷப் பண்ட்க்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று பார்ப்போம்.