Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கேப்டன் பதவி ராஜினாமா எதிரொலி.. சிஎஸ்கேவை முந்திய மும்பை.. பணக்கார ஐபிஎல் அணி பட்டியல்

மும்பை: ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடர் பல்வேறு உலகின் முன்னணி விளையாட்டு தொடரை விட அதிக வருமானத்தை ஈட்டுவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

பிசிசிஐயின் நேர்த்தியான தொழில் அணுகுமுறை, லாபத்தை பிரித்து வழங்குவதில் உள்ள சரியான முறையே ஐபிஎல் அணிகளின் விலை மதிப்புக்கு காரணம் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐபிஎல் வருகை மூலம் கிரிக்கெட் மீது அதீத கவனம் கிடைத்துள்ளதாகவும், கால்பந்துக்கு பிறகு கிரிக்கெட் அதிக பார்வையாளர்களை ஈட்டியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனாவிலும் லாபம்

கொரோனாவிலும் லாபம்

கொரோனா காலக் கட்டத்திலும் , பார்வையாளர்கள் மைதானத்தில் இல்லாமலே அனைத்து அணிகளும் லாபத்தை ஈட்டியதாகவும், அதற்கு வீரர்களின் ஊதியத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டதே காரணம் என்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் ஐபிஎல்லின் மதிப்பு இரு மடங்காக உயரும் என்றும் ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது.

அதிகரிக்க வாய்ப்பு

அதிகரிக்க வாய்ப்பு

10 அணிகள் பங்கேற்றுள்ளதால் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும் என்றும், அதனை பிசிசிஐ 10 அணிகளுக்கும் பிரித்து தருவதன் மூலம் அணிகளின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே 10 அணிகளின் பங்குகளை பல்வேறு நிறுவனம் போட்டி போட்டு வாங்குகிறது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மும்பை முதலிடம்

மும்பை முதலிடம்

ஐபிஎல் 10 அணிகளின் அதிக விலை மதிப்பு கொண்ட பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 9962 கோடி ரூபாய் உடன் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே 8811 கோடி ரூபாயுடன் 2வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 8428 கோடி ருபாயுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி 8236 கோடியுடன் 4வது இடத்திலும் உள்ளது.

இத்தனை கோடியா?

இத்தனை கோடியா?

டெல்லி அணி 7930 கோடியுடன் 5வது இடத்திலும், பெங்களூரு 7853 கோடியுடன் 6வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி 7662 கோடியுடன் 7வது இடத்திலும், ஐதராபாத் அணி 7432 கோடியுடன் 8வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி 7087 கோடியுடன் 9வது இடத்திலும், குஜராத அணி 6512 கோடியுடன் 10வது இடத்திலும் உள்ளது.

Story first published: Wednesday, April 27, 2022, 12:42 [IST]
Other articles published on Apr 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+