Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2023 - அதிக விக்கெட் எடுத்த விரர்கள்? சிஎஸ்கே வீரர் முதலிடம்.. முழு பட்டியல் இதோ

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மழையால் பாதிக்கப்பட்டாலும் பேட்ஸ்மேன் பவுலர்கள் என இருவருக்குமே சரிசமமான சூழலை ஆடுகளம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இலங்கையில் நடைபெறுவதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் ஆடுகளம் சாதகமாக செயல்படாமல் நன்றாக பந்து வீசும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளும் சாதகமாக செயல்பட்டது.

Most wickets and best economy by a bowler in asia cup 2023

இந்த நிலையில் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை வீரர் பதிராணா இருக்கிறார். சிஎஸ்கே வில் தோனியிடம் பயிற்சி பெற்ற பதிரானா ஆறு போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.இதில் அதிகபட்சமாக ஒரு ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியாவின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் இடம்பெற்றிருக்கிறார். இவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். குறிப்பாக இறுதிப்போட்டியில் மட்டும் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் இளம் வீரர் வெல்லாலகே இருக்கிறார். அவர் 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Most wickets and best economy by a bowler in asia cup 2023

இதேபோன்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.

இதேபோன்று பெஸ்ட் எக்கனாமி எனப்படும் ஒரு ஓவருக்கு குறைந்த ரன்களை விட்டு கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் இருக்கிறார். அவர் மூன்று புள்ளி மூன்று நான்கு என்ற எக்கனாமி வைத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் குல்தீப் யாதவும், மூன்றாவது இடத்தில் இலங்கை வீரர் தனஞ்செய டீ செல்வாவும் இருக்கிறார்கள்.

Story first published: Monday, September 18, 2023, 17:16 [IST]
Other articles published on Sep 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+