Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியல்

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்ஸ்மேன்களை கொண்டாட ஒரு கூட்டம் இருக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்,இந்தியா எப்போதுமே பேட்ஸ்மேன்களை கொண்டாடும் நாடாக தான் இருக்கிறது என்று வருத்தத்துடன் கூறி இருந்தார்.

இந்த சூழலில் பவுலர்களை கௌரவப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டின் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் யார் என்பதை தற்போது இந்த பட்டியலில் பார்க்கலாம். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மொத்தத்தையும் சேர்த்து இந்த பட்டியலை தயாரித்திருக்கிறோம்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இந்த பட்டியலில் 12வது இடத்தை பிடித்திருப்பவர் இர்பான் பதான் இந்தியாவுக்காக 173 சர்வதேச போட்டிகள் விளையாடி 301 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் 11வது இடத்தை பிடித்திருப்பவர் அஜித் அகார்கர் இந்தியாவுக்காக 221 போட்டிகளில் விளையாடி 349 கிரிக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா. இதுவரை 195 போட்டிகளில் விளையாடி 397 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்னும் எத்தனை போட்டிகள் விளையாடுவார் இன்னும் எத்தனை விக்கெட்டுகள் எடுப்பார் என்பதை கணிக்க முற்பட்டால் அவர் கிட்டத்தட்ட 500 விக்கெட்டுகள் அல்லது 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்த கூடும்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் இஷாந்த் ஷர்மா. இந்தியாவுக்காக 199 போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி, இவர் 188 போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக 448 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ரீநாத், இவர் இந்தியாவுக்காக 296 போட்டிகளில் விளையாடி 551 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. இவர் 343 போட்டிகளில் விளையாடி 568 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜாகீர் கான். இந்தியாவுக்காக 33 போட்டிகள் விளையாடி 597 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் கபில்தேவ். இவர் 356 போட்டிகளில் விளையாடி 687 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங். இவர் 365 போட்டியில் விளையாடி 707 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்.இவர் 281 போட்டியில் விளையாடி 744 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே. இவர் 401 போட்டியில் விளையாடி 953 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தற்போது அஸ்வின் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் அஸ்வின் கும்ப்ளேவின் ரெக்கார்டை முறியடிப்பாரா என்பது கொஞ்சம் முடியாத காரியம் போல் தான் தெரிகிறது. அஸ்வின் இன்னும் அதிகபட்சம் 120 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கும்ப்ளேவின் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை முறியடிக்க முடியும். ஆனால் 953 என்ற விக்கெட் அளவை அவரால் தொட முடியுமா என்பது கேள்விக்குறியே.

Story first published: Monday, September 16, 2024, 17:33 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+