For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? பும்ரா, ஜடேஜா முந்துவார்களா? விவரம் இதோ

மும்பை : இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்து படைக்கப்படுகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக கிரிக்கெட் உலகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு புயலை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த செய்தியில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் யார் என்று பார்த்தோம்.

Most Wickets in Asia cup history - Will Jadeja break muralidharan record

இந்த செய்தி தொகுப்பில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் வடிவில் இலங்கை அணியின் முரளிதரன் தான் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். 24 போட்டிகளில் விளையாடிய முரளிதரன் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து மலிங்கா 14 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளையும், இலங்கை வீரர் அஜந்தா மண்டிஸ் எட்டு போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். நான்காவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல் 12 போட்டிகள் விளையாடி 25 விக்கெட்டுகளையும் சமீந்தா வாஸ் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடி 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்திலும் பட்டியலிலும் இந்திய அளவில் முதல் இடத்தை இர்பான் பதான் பெற்றிருக்கிறார்.
அவர் 12 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை இழுத்து இருக்கிறார்.

இந்த பட்டியலில் ஜடேஜா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார் அவர் 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஜடேஜா இந்த தொடரில் 11 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தினால் அவர் முரளிதரன் சாதனையை தகர்த்து முதலிடத்தை பிடித்து விடுவார். இந்த நிலையில் ஆசிய கோப்பை டி20 வடிவில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றிருக்கிறார். 5 போட்டிகளில் விளையாடிய அவர் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இரண்டாவது இடத்தை இலங்கை அணியின் ஹசரங்கா 6 போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளும் பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ் 6 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். ஆசிய கோப்பை வரலாற்றிலேயே ஒரே தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் அஜந்தா மெண்டீஸ் 2008 ஆம் ஆண்டு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 26, 2023, 17:16 [IST]
Other articles published on Aug 26, 2023
English summary
Most Wickets in Asia cup history - Will Jadeja break muralidharan record ஆசிய கோப்பை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்? பும்ரா, ஜடேஜா முந்துவார்களா? விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+