For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்பா... உலகின் பெரிய மைதானம்... மோதேரா மைதானம் குறித்து ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்.. செம பின்னணி

அகமதாபாத் : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது போட்டி மோதேரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

அகமதாபாத்தில் நடக்கவுள்ள இந்த முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிக்காக மோதேரா மைதானம் தயாராகியுள்ளது.

உலகின் பெரிய மைதானமாக ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

 முதல் சர்வதேச போட்டி

முதல் சர்வதேச போட்டி

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் இன்றைய தினம் இன்னும் சில நிமிடங்களில் துவங்கவுள்ளது. இதற்கென மோதேரா மைதானம் சிறப்பாக தயாராகியுள்ளது. சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இது.

 நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு

இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்கலாம். ஆனால் கொரோனா காரணமாக இன்றைய போட்டியில் 55,000 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையின்போது இந்த மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்றிருந்தார்.

 4 டிரஸ்ஸிங் ரூம்கள்

4 டிரஸ்ஸிங் ரூம்கள்

இந்த வளாகத்தில் 9 பிட்ச்களுடன் கூடிய இரண்டு பயிற்சி மைதானங்கள் உள்ளன. மேலும் 11 பிட்ச்களும் காணப்படுகின்றன. இதனிடையே இரண்டு ஜிம்கள், வார்ம் -அப் பகுதியுடன் கூடிய 4 டிரஸ்ஸிங் ரூம்களும் இங்கு உள்ளன. கடுமையான மழை பெய்தாலும் 30 நிமிடங்களில் வடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 ஸ்குவாஷ் கோர்ட்

ஸ்குவாஷ் கோர்ட்

3டி மினி தியேட்டருடன் கூடிய 55 க்ளப்அவுசுடன் ஒலிம்பிக் அளவு நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி களம், ஸ்குவாஷ் கோர்ட் உள்ளிட்டவையும் இந்த வளாகத்தில் காணப்படுகின்றன. கோச்களுக்கு தனியான பகுதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 3000 கார்களும் 10,000 இரு சக்கர வாகனங்களும் பார்க் செய்யும் வகையில் பெரிய பார்க்கிங் ஏரியா உள்ளது.

 1,10,000 ரசிகர்கள் அனுமதிக்கலாம்

1,10,000 ரசிகர்கள் அனுமதிக்கலாம்

உலகின் பெரிய மைதானமாக மோதேரா காணப்படுகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் 1,00,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும்வகையில் உள்ளது. இந்தியாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 40,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்கலாம். இதற்கு அடுத்ததாக, சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானம் 33,500 பார்வையாளர்கள் மற்றும் மும்பை வான்கடே மைதானம் 32,000 ரசிகர்கள் அமரும்வகையில் உள்ளது.

 இந்தியாவின் அடையாளம்

இந்தியாவின் அடையாளம்

மொத்தத்தில் இந்தியாவின் பெருமைக்குரிய விளையாட்டு அடையாளமாக தற்போது மோதேரா மைதானம் விளங்குகிறது. இந்த மைதானத்தில் விளையாட இந்திய வீரர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து வீரர்களும் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில், சிறிது நேரத்தில் இதன் முதல் சர்வதேச போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக துவங்கவுள்ளது.

Story first published: Wednesday, February 24, 2021, 22:24 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Motera stadium will host its first International Game today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+