Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கைதொழும் தேவதையை கொண்டாடும் விளையாட்டு பிரபலங்கள்... ஐபிஎல் அணிகள்

டெல்லி : அன்னையர் தினம் இன்று சர்வதேச அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி விளையாட்டு பிரபலங்கள், ஐபிஎல் அணிகள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.

தன்னுடைய வலிமைக்கு காரணமான மற்றும் சிறப்பாக வழிநடத்திவரும் தன்னுடைய அன்னைக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிறப்பான கொண்டாட்டம்

சிறப்பான கொண்டாட்டம்

உலகெங்கிலும் சிறப்பான வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு உயிர்கொடுத்த அன்னைக்கு சிறப்பான வகையில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ஐபிஎல் அணிகளும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னா உருக்கம்

சுரேஷ் ரெய்னா உருக்கம்

சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, தன்னுடைய வலிமைக்கு காரணமான மற்றும் தன்னை சிறப்பாக வழிநடத்திவரும் தன்னுடைய அன்னைக்கு அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய அன்னை தனக்கு எப்போதும் மிகப்பெரிய உத்வேகமாக இருந்துவருவதாகவும் பாராட்டுதெரிவித்துள்ளார்.

மனைவிக்கு வார்னர் பாராட்டு

மேலும் உலகின் வலிமையான அன்னையர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை ரெய்னா பகிர்ந்துள்ளார். இதேபோல சிறப்பான அன்னையாக திகழும் தன்னுடைய மனைவி கேன்டீசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எவ்வளவு சிறப்பான தாய் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே பாராட்டு

இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நமது முதல் மற்றும் சிறப்பான சூப்பர் ஹீரோ நமது தாய் என்று குறிப்பிட்டுள்ளது. ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணி வீரர்களின் வாழ்த்து வீடியோவை பகிர்ந்துள்ளது.

அன்னையர்களுக்கு வாழ்த்து

அன்னையர்களுக்கு வாழ்த்து

இதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. நிபந்தனைகளற்ற அன்பை வெளிப்படுத்தும் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் அந்த அணியின் வீரர்கள் ஷிகர் தவான் உள்ளிட்டவர்கள் தங்களது அன்னையருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளது.

Story first published: Sunday, May 9, 2021, 14:11 [IST]
Other articles published on May 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+