கொல்கத்தா : அன்னை தெரசாவின் 114 வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கழித்த அன்னை தெரசா கடந்த 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தார். இன்று அவர் இந்த பூவுலகில் இல்லை என்றாலும் அவருடைய 114 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
அன்னை தெரசா ராசா பல ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து நோபல் பரிசு வென்றிருக்கிறார். இந்த நிலையில் அன்னை தெரசா கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்துவின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போனவர். அந்த காலத்தில் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. எப்போதுமே ஆக்ரோஷமாக இருக்கும் சித்து ஒரு முறை தாம் வென்ற ஆட்டநாயகன் விருதுக்கு கிடைத்த பணத்தை கொல்கத்தாவில் மக்களுக்கு சேவையாற்றி வரும் அன்னை தெரசாவுக்கு வழங்க முடிவெடுத்தார்.
இதை அடுத்து கொல்கத்தாவுக்கு வந்த சித்து அன்னை தெரசாவை சந்திக்க சென்றார். அப்போது அன்னை தெரசா ஒரு நோயாளிக்கு தன்னுடைய சேவையை ஆற்றிக் கொண்டிருந்தார். அதை பார்த்தவுடன் சிந்துவுக்கு கொமட்டிக் கொண்டு வந்ததாம். இதனை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். எப்படி ஒரு மனிதரால் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இப்படி சேவை ஆற்ற முடியும் என்று சித்து அசந்து போய்விட்டாராம்.
இதை அடுத்து அன்னை தெரசாவை சந்தித்தபோது தான் கொண்டு வந்த காசோலையை அன்னை தெரசாவிடம் வழங்கியிருக்கிறார். ஆனால் அதற்கு அன்னை தெரசா கூறிய பதில் தான் சித்துவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காசோலையை வாங்க மறுத்த அன்னை தெரசா, சித்து இங்கு பணம் நிறையவே இருக்கிறது.
பணம் கொடுக்க அதிக மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் இறங்கி மற்றவர்களுக்கு சேவை செய்ய தான் ஆட்கள் இல்லை. நீங்கள் உங்கள் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். மாறாக உங்களின் ஒரு மணி நேரமாவது இங்கு செலவழித்து இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றுங்கள்.
சேவையாற்ற தான் இங்கு மனிதர்கள் இல்லை என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவின் இந்த சொற்பொழிவு சித்துவின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
அதற்கு முன்பு வரை பணம் கொடுப்பதுதான் சேவை என நினைத்துக் கொண்டிருந்த சித்துவுக்கு அன்னை தெரசா ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அன்னை தெரசா அளவு நம்மால் சேவை செய்ய முடியவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு எந்த சிரமமும் தடையும் கொடுக்காமல் இருப்பது பெரும் மனிதத் தன்மையாக இருக்கும்.