Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊக்கமெல்லாம் விராட் கோலிக்கு பிரச்சினையே இல்லை... 110% இருக்கு.. மார்கஸ் பாராட்டு

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஊக்கத்துடன் விளையாடுவது பிரச்சினையே இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி ஒவ்வொரு முறை விளையாட வரும்போதும் 110 சதவிகிதம் ஊக்கத்துடன் வருவார் என்றும் அதற்கேற்ப ஆஸ்திரேலிய அணி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டோய்னிஸ் கூறியுள்ளார்.

சாதாரணமாகவே அவர் அதிக ஊக்கத்துடன் போட்டிகளை எதிர்கொள்வார் என்றும் தற்போது தன்னுடைய குழந்தை பிறப்பிற்காக அவர் இடையிலேயே நாடு திரும்பவுள்ள நிலையில், அது இன்னும் அதிகரித்து காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் அதிரடி

ஐபிஎல்லில் அதிரடி

நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி 352 ரன்களையும் 13 விக்கெட்டுகளையும் எடுத்து அதிரடி காட்டினார். இந்த அதிரடியை இந்தியாவிற்கு எதிரான தொடர்களில் அவர் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் குறித்து ஸ்டோய்னிஸ்

விராட் குறித்து ஸ்டோய்னிஸ்

இந்நிலையில் விராட் கோலியிடம் 110 சதவிகித ஊக்கம் காணப்படுவதாகவும் அவர் ஒவ்வொரு போட்டிகளில் விளையாட வரும்போதும் அந்த ஊக்கத்துடன்தான் வருவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊக்கம் அதிகரிக்கும்

ஊக்கம் அதிகரிக்கும்

சாதாரணமாகவே அவர் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுவார் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோய்னிஸ், தற்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்பை எதிர்பார்க்கும்நிலையில், அவரது ஊக்கம் இன்னும் அதிகரித்து காணப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா ரெடி

ஆஸ்திரேலியா ரெடி

கோச் ஜஸ்டின் லாங்கரின் கீழ் பயிற்சி பெற்றுவரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், விராட் கோலியை வீழ்த்துவதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக உள்ளதாகவும் ஸ்டோய்னிஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் கைகொடுத்த திட்டங்களை தற்போது பிரயோகிக்க ஆஸ்திரேலிய அணி மும்முரமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Story first published: Sunday, November 22, 2020, 11:29 [IST]
Other articles published on Nov 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+