For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

54 பந்தில் 117 ரன்கள்.. 13 சிக்சர்கள்.. பவுலிங்கிலும் 4 விக்கெட்.. MPL தொடரில் கலக்கிய U-19 வீரர்

புனே : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்படி இளம் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறதோ, அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் டிஎன்பிஎல் என்பிஎல் போன்ற நடத்தப்படும் தொடர் கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கையில் புரட்டிப் போடுகிறது.

டிஎன்பிஎல் தொடர் மூலம் சிறப்பாக விளையாடி எத்தனையோ வீரர்கள் ஐபிஎலில் சாதித்து இருக்கிறார்கள். இதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் தொடர்களில் எத்தனையோ வீரர்களின் திறமை அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

MPL 2023 - 18 Year old Arshin Kulkarni hits 54 balls 117 runs and picks 4 wickets

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் அர்சின் குல்கர்னி என்ற ஆல்ரவுண்டர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 18 வயதான அர்சின் குல்கர்னி ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார்.

புனேவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒன்றில் புனேரி பாபா அணிக்கு எதிராக அர்சின் குல்கர்னி பேட்டிங் செய்தார். அப்போது தனது அதிரடி ஆட்டத்தால் பார்வையாளர்களை பரவசப்படுத்திய குல்கர்னி பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார். 24 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த குல்கர்னி 46 பந்துகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

54 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அதிவேக சதத்தை குல்கர்னி பூர்த்தி செய்தார். இதில் அவர் 16 பந்துகளில் 90 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆம் 13 சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளையும் அவர் அடித்துள்ளார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பந்து வீச்சிலும் தன்னுடைய திறமையை அர்சின் குல்கர்னி காட்டியிருக்கிறார். நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அர்சின் குல்கர்னி நான்கு முக்கி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுவும் கடைசி பந்தில் புனே அணி வெற்றி பெற ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவர் வீசிய குல்கர்னி அபாரமாக செயல்பட்டு நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கடைசி ஓவரில் வீழ்த்தினார். இதன் மூலம் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பலரும் யார் இந்த அர்சின் குல்கர்னி என தேடி வருகிறார்கள். ஒரு சிலர் நமக்கு அடுத்த ஹர்திக் பாண்டியா கிடைத்துவிட்டார் என்றும் பாராட்டி வருகிறார்கள். எனினும் இதேபோன்று ஆட்டத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினால் நிச்சயம் ஐபிஎல் மற்றும் இந்திய அணியிலும் அர்சின் குல்கர்னை நாம் எதிர்பார்க்கலாம். என்னடா ஒரு ஆட்டத்தில் இப்படி புகழ்கிறார்கள் என பார்க்க வேண்டாம் அவர் ஆடிய ஷார்ட் ஒவ்வொன்றும் பெரிய ஜாம்பவான்களின் சாயல் தெரிந்தது.

Story first published: Tuesday, June 20, 2023, 22:15 [IST]
Other articles published on Jun 20, 2023
English summary
MPL 2023 - 18 Year old Arshin Kulkarni hits 54 balls 117 runs and picks 4 wickets 54 பந்தில் 117 ரன்கள்.. 13 சிக்சர்கள்.. பவுலிங்கிலும் 4 விக்கெட்.. MPL தொடரில் கலக்கிய U-19 வீரர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+