புனே : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரின் சிறப்பாக செயல்பட்டும். டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும் போதிய அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட்டு செல்லவில்லை என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ருதுராஜ் தற்போது மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரில் பூனேரி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

டிஎன்பிஎல் லீக் தொடர் பாணியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ருதுராஜ் நன்றாக விளையாடினாலும், அவருக்கு அந்த துரதிர்ஷ்டம் மட்டும் பின் தொடர்ந்து வருகிறது. நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரத்தனகிரி அணியும், புனேரி அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனேரி அணி 19.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்தது.
இதனை எடுத்து களமிறங்கிய ரத்தினகிரி அணி 19.4 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில் புனேரி வீரர்கள் களமிறங்கினார். நம்பர் நான்காவது வீரராக விளையாடிய ருதுராஜ், 15 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 193 என்ற அளவில் இருந்தது.
இந்த நிலையில் ருதுராஜ் ரன் ஓடும் போது பேட்டிங் கிரிஸ்க்கு வந்து விட்டார். ஆனால் அவருடைய பேட் சரியாக கிரிஸில் படும்போது திடீரென்று சிக்கிக் கொண்டது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டால் பேட்டை தேய்த்துக் கொண்டு கிரீசை தாண்ட முடியவில்லை. இந்த நேரத்தில் கீப்பர் ரன் அவுட் செய்து விட்டார்.
மூன்றாம் நடுவரின் உதவி நாடும்போது சரியான நேரத்தில் ருதுராஜ், பேட் தரையில் பட்டு சிக்கிக்கொண்டது.இதனால் ருதுராஜ் ஆட்டம் இழந்தார். இதை பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு மோசமான ரன் அவுட் நிகழ்ந்தது கிடையாது என்றும் ருதுராஜ்க்கு அதிர்ஷ்டம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.