Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தல" டோணிக்கு ஹோட்டல் ரூமில் 4 ஸ்டார் நினைவு பரிசு அளித்த இந்திய வீரர்கள்

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் பல சாதனைக்கு வித்திட்ட முன்னாள் கேப்டன் டோணிக்கு பெங்களூரில் சக வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதில் டோணியின் சாதனைகளை குறிக்கும் வகையில் 4-ஸ்டார் பரிசு அளித்தனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது. இவ்விரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி பெங்களூருவில் இன்று நடந்தது.

MS Dhoni '4-Star' unique memento gets from team

இந்த போட்டி துவங்கும் முன் முன்னாள் கேப்டன் டோணியின் சாதனைகளை பாராட்டும் விதமாக ஹோட்டல் ரூமில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய அணியின் வீரர்கள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் டோணியின் சாதனையை குறிக்கும் வகையில் அவருக்கு மரத்தாலான 4 - ஸ்டார் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

MS Dhoni '4-Star' unique memento gets from team

இந்த நான்கு ஸ்டார்கள் டோணியின் சாதனைகளான மூன்று உலக கோப்பைகள் 2007 டி-20, 2011 50-ஓவர், 2013 சாம்பியன் டிராபி மற்றும் உலகின் நெம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்ததை குறிக்கும் விதத்தில் செய்யப்பட்டதாக நிர்வகிகள் தெரிவிக்கின்றனர்.

Story first published: Thursday, February 2, 2017, 4:17 [IST]
Other articles published on Feb 2, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+