Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு இன்றுடன் 41 வயது.. காத்திருக்கும் சவால்கள் என்ன? தல யின் எதிர்காலம் என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது 41 வது வயதில் அடியேடுத்து வைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும் என்ற பாடல் வரிகள் போல், தோனியின் சாதனையை கேட்டால் சின்ன குழந்தைகளும் சொல்லும்.

இதனால் தற்போது தோனி முன் காத்திருக்கும் சவால்கள் என்ன, அவருடைய எதிர்காலம் என்ன என்பது குறித்து தற்போது காணலாம்.

தோனியின் ஆசை

தோனியின் ஆசை

தோனிக்கு 41 வயது ஆகிவிட்டது. அவர் கிரிக்கெட் உலகில் செய்யாத சாதனைகள் இல்லை, விளையாடாத போட்டிகள் இல்லை. ஆனால் அவருக்கு இன்னும் ஒரு ஆசை உள்ளது. சென்னை மக்கள் முன் சிஎஸ்கே அணிக்காக ஒரு முறை விளையாட வேண்டும். ஆனால், அதற்கு முதல் தடையாக இருப்பது அவருடைய வயது தான். தற்போது தோனிக்கு மூட்டு வலி பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப முழு உடல் தகுதியை பெற் வேண்டும். இதனை அடைவதே தோனிக்கு முதல் சவாலாக கருதப்படும். தோனியின் 2வது சவாலே, சிஎஸ்கே அணியை கட்டமைக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது தோனியின் முக்கிய பணியாகும்.

பயிற்சியாளராக பொறுப்பு

பயிற்சியாளராக பொறுப்பு

தோனி கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் அவர் சிஎஸ்கே அணிக்கு பயிற்சியாளராகவோ, மெண்டராகவோ பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே என்று நாம் சுருக்கிவிட முடியாது. இந்திய அணிக்கே பயிற்சியாளராக கூட தோனி செயல்படலாம். ஏற்கனவே கடந்த டி20 உலகக் கோப்பையில் தோனி மெண்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் தோனி?

அரசியலில் தோனி?

தோனி கிரிக்கெட்டை தாண்டி பிரபலமானவர். இதனால் இவரை வளைத்து போட பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராக உள்ளனர். இதனால் தோனிக்கு நியமன எம்.பி, அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பு உள்ளிட்ட பணிகள் காத்துள்ளது. இதனை ஏற்பதும், ஏற்காததும் தோனியின் முடிவே. ஆனால் நிச்சயம், ராணுவத்தின் தோனி பெரிய இடத்துக்கு வரவும் வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, July 7, 2022, 16:56 [IST]
Other articles published on Jul 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+