Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கைக்கு வந்த கேட்சை விட்டுட்டு, ஆட்டோகிராப் வேணுமா.. தீபக் சாஹரிடம் லந்து செய்த தோனி.. சேட்டை வீடியோ

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹரும் தோனியும் கவுண்டமணி செந்தில் போல் அடிக்கடி விளையாடி வருவது ரசிகர்களை குதூகல படுத்திருக்கிறது. தீபக் சாஹரை தனது செல்லப்பிள்ளை போல் தோனி வளர்த்து வருகிறார்.

எப்படி மனதுக்குப் பிடித்தவர்களிடம் நாம் விளையாடுவோமோ அதேபோல் தீபக் சாஹரிடம் தோனி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

MS Dhoni again playfully not signing autograph to deepak chahar for catch miss

அண்மையில் பேட்டிங் பயிற்சி செய்யும் போது தோனி தீபக் சாஹர் முகம் வரை பேட்டை கொண்டு வந்து விளையாடினார். இதேபோன்று டாஸ் வீசி விட்டு வந்து கொண்டிருந்த தோனி சும்மா நின்று கொண்டிருந்த தீபக் சாஹரிடம் தலையில் அடிக்க சென்றார். இந்த நிலையில் இறுதி போட்டியில் நேற்று முதலில் பேட்டிங் செய்திருந்த குஜராத் அணியில் கில் மூன்று ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் நழுவவிட்டார்.

இதன் மூலம் ஆட்டத்தையே சி எஸ் கே நழுவ விட்டது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சாகாவின் கேட்ச் ஒன்று தீபக் சாஹர் நேற்று கோட்டை விட்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு அனைவரும் தோனியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

அப்போது தீபக் சாஹர் தோனியிடம் தன் சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு தோனி என்கிட்ட வராதே போ என்று சொன்னார். மேலும் அருகில் இருந்த ராஜூ சுக்லாவிடம் கையில் வந்த கேட்சை விட்டுட்டான் சார். இப்போ வந்து ஆட்டோகிராப் கேட்கிறான் என்று தோனி சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து கொஞ்ச நேரம் விளையாடிய தோனி பிறகு தீபக் சாஹருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் .

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நேற்று கில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் காரணமாக அவர் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 30, 2023, 15:50 [IST]
Other articles published on May 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+