டோணி கிராமத்திற்கு புதிய சாலை: உத்தரகாண்ட் முதல்வர் அறிவிப்பு
டோராடூன்: உலகக் கோப்பையை வென்ற டோணியை கௌரவிக்கும் வகையில் அவர் சொந்த ஊருக்கு புதிய சாலை அமைத்து தருவதாக உத்தரகாண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.
28 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சாதனையை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித் தந்துள்ள வீரர்களுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சச்சினுக்கும், டோணிக்கும் முசோரியில் பிளாட் அல்லது வீடு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள டோணியின் சொந்த கிராமமான ல்வாலிக்கு புதிய சாலை அமைத்துத் தருவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார். இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வாழ்கின்றன.
இங்கு புதிய சாலை அமைத்து தருமாறு டோணியின் உறவினர்களும், கிராமத்தினரும் அரசை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது டோணி மூலமாக நிறைவேறியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
