Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லை மீறிய தோனி ரசிகர்கள்.. நாடி நரம்பெல்லாம் சிஎஸ்கே அதான் இப்படி.. சேப்பாக்கத்தில் என்ன நடந்தது?

சென்னை : இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியைக் காண ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருந்தனர். இந்த மைதானம் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய மைதானம் என்பதால் அந்த அணியின் இரண்டு இளம் ரசிகர்களும் வந்திருந்தார்கள்.

MS Dhoni and CSK fans supports Australia just because of yellow jersey

அந்த இருவரும் மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்து இருந்தார்கள். சிஎஸ்கே அணியின் உடை மஞ்சள் நிறத்தில் இருக்கும். சரி, அந்த ரசிகர்கள் அணிந்து இருந்தது சிஎஸ்கே அணியின் உடை தானே என பார்த்தால், அது ஆஸ்திரேலிய அணியின் உடை.

அப்புறம் தான் விஷயமே புரிந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி உடை மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். யார் மஞ்சள் நிற டி-ஷர்ட் போட்டாலும் அந்த அணிக்கு தான் எங்கள் ஆதரவு என அந்த வெறி பிடித்த சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள்.

ஐபிஎல் அணிகளிலேயே அதிக வெறி பிடித்த ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சென்னையில் மட்டுமல்ல, வேறு எந்த நகரத்தில் போட்டி நடந்தாலும் அதிக அளவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டி-ஷர்ட்டை பார்க்க முடியும்.

தோனி மீதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதும் அன்பு இருக்கலாம், அதற்காக இந்தியா ஆடும் போட்டியில் இப்படி மஞ்சள் நிற உடை அணிந்த அணி என்பதற்காகவே ஆஸ்திரேலியா அணியை ஆதரிக்கலாமா என் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால், அந்த இளம் ரசிகர்கள் ஒரு வேடிக்கையாகத் தான் இதை செய்தது போல இருக்கிறது. அவர்கள் இப்படி வித்தியாசமாக செய்ததாலேயே தொலைக்காட்சியில் அவர்களை தனியாக காண்பித்தனர். அதற்காக கூட அவர்கள் இதை செய்து இருக்கலாம்.

இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். விராட் கோலி அசத்தலான கேட்ச்சை பிடித்து உலகக்கோப்பையில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்தார்.

Story first published: Sunday, October 8, 2023, 16:43 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+