Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர், தோனி, ரோகித் ஆகியோர் திருமண விழாவில் சந்திப்பு.. யாருடைய திருமணம் தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர் முன்னாள் கேப்டன் தோனியை திருமண விழா ஒன்றில் சந்தித்து பேசிய சம்பவம் ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறது. இருவரும் ஒரே காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடினாலும், அதன் பின் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

தோனிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். தோனியை மக்கள் பெரும் அளவு கொண்டாடுவார்கள். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது தோனியால்தான் என்று பலரும் கூறி வருவார்கள். இது கம்பீருக்கு பிடிக்காது. இதனால் கம்பீர் தோனியை மறைமுகமாக பல முறை விமர்சித்து வந்திருக்கிறார்.

MS Dhoni Gambhir wedding

அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் தனிநபர் வீரரை துதி பாடும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கம்பீர் பலமுறை சாடி இருக்கிறார். இந்த நிலையில் தோனி குறித்து சில முறைகளும் நல்ல வார்த்தைகளையும் நம்பி பயன்படுத்தியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் தோனி தான் என்று ஒரு முறை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வரும் நிலையில் குஜராத்தில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் கௌதம் கம்பீரும் தோனியும் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குஜராத்தில் உள்ள ஹர்ஷ் சங்வி என்ற அமைச்சரின் சகோதரரான உட்கார்ஷ் சங்க்வியின் திருமணம் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்ச்சிகள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன்சிங், இர்பான் பத்தான் பார்த்திவ் பட்டேல் பங்கேற்றனர்.

இது போன்று இளம் வீரர் திலக் வர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த விழாவில் பங்கேற்றது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தோனியும் கம்பீரும் இந்த திருமண விழாவில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பேசிக் கொண்டார்கள். தோனி தன்னுடைய மனைவி சாக்ஷி உடன் பங்கேற்று இருந்தார்.

Story first published: Sunday, August 17, 2025, 17:27 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+